சென்னை || இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களுக்கு அதிரடி இலவசத்திட்டம்.! வெளியானது அறிவிப்பு.!

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2022-2023 கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2010-ம் ஆண்டு முதல் சென்னையை சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், ‘சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் … Read more

தூய்மை பாரத திட்டத்தின் கழிப்பறைகளை கட்டாமல் அரசு பணம் கையாடல்.. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு!

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் ஊராட்சியில் கழிப்பறைகளை கட்டாமல் அரசு பணத்தை கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டு வரை 403 கழிப்பறைகள் கட்ட பணம் பெற்று, 30 கழிப்பறைகளை கட்டாமல் மோசடி நடைபெற்றதாக பாண்டிகண்ணன் என்பவர் புகாரளித்தார். அதன் பேரில், மறவங்கல ஊராட்சி செயலாளர் முத்துக்கண்ணு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், … Read more

செஞ்சட்டை பேரணியில் சர்ச்சைக்குரிய கோஷம்: மதுரையில் தி.க.வினர் மீது வழக்குப் பதிவு

மதுரை: மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியின்போது, சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பியதாக தி.க.வினர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில், செஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு நடந்தது. இதையொட்டி, மதுரை காளவாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணியை சு. வெங்கடேசன் எம்பி தொடங்கி வைத்தார். பழங்காநத்தம் பகுதியை சென்றடைந்து, அங்கு நடந்த மாநாட்டில் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் … Read more

முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்க நளினி மனுதாக்கல்: சிறைத்துறை பதிலளிக்க கோர்ட் உத்தரவு

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி தாக்கல்செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும், ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 31 ஆண்டுகளாக … Read more

உயிர்பலி வாங்கத் துடிக்கும் போலீஸ் காலனி மேல்நிலை தொட்டி: அதிகாரிகள் கவனிப்பார்களா?

Trichy Police colony people request to remove damaged water tank: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி போலீஸ் காலனி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டவேண்டி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு; திருவெறும்பூர் அருகே சுமார் 35 வருடங்களுக்கு முன்பு உருவானது நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட போலீஸ் காலனி. அப்பொழுது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பொதுமக்களின் குடிநீர் … Read more

இசைஞானி இளையராஜாவுக்கு இன்று வந்த ஒரு முக்கிய போன் கால்.! 

நல்ல இசையை ரசிக்க மொழி, மதம், நாடு, இனம் எதுவும் கிடையாது. அப்படியாக உலகிலுள்ள அனைத்து நல்ல இசைகளையும் அனைத்து மக்களுமே விரும்பி கேட்பது வழக்கம்.  அந்த இசை கலைஞர்களை கொண்டாடி தேர்ப்பதிலும் மக்களுக்கு அவ்வளவு ஆனந்தம். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை உலகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களாலும், ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவர் ஐந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அவரின் ரசிகர்கள் … Read more

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தள்ளுமுள்ளு

தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி பிரச்சனை காரணமாக இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்டத்தின் போது கட்சியை பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான முத்துவிஜயா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மாநகராட்சி கவுன்சிலர் குறுக்கிட்டு பேசியதால் இருத்தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. Source link

நிரந்தர அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தொன்மை வாய்ந்த ரிப்பன் மாளிகை இரவில் வண்ணமயமாக ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின் விளக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை 109 ஆண்டு கால பழமையான கட்டடம். தொன்மை வாய்ந்த ரிப்பன் மாளிகையில், சுதந்திர மற்றும் குடியரசு தினங்களின்போது, தேசிய கொடியை குறிக்கும் வகையிலான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். அதேபோல், மார்பக புற்றுநோய் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளஞ்சிவப்பு நிறத்தில் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். ரிப்பன் … Read more

கோயில் திருவிழா: தேவராட்டத்தில் பங்கேற்ற உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் அருகே கோயில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெயில் நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த விழாவில் கோயிலைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி ஏழு தினங்கள் சிறப்பாக வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயில் திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்றிரவு திடீரென கோயிலுக்கு வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி … Read more

21 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

Stalin urged Governor RN Ravi to grant assent to 21 bills: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தினார். தமிழ்நாடு … Read more