பேரறிவாளன் விடுதலை.. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.. விஜயகாந்த்.!!

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள்  பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக  சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். தனது பாதி காலத்தை  சிறையிலேயே அவர் அனுபவித்து விட்ட நிலையில் பேரறிவாளனின் விடுதலை அவரது தாயார் அற்புதம்மாளின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த … Read more

பேரறிவாளன் விடுதலை | “இது முழுக்க முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றிதான்” – ஓபிஎஸ், இபிஎஸ்

சென்னை: “பேரறிவாளன் விடுதலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. இது முழுக்க முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றிதான்” ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது, அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. … Read more

‘பேரறிவாளன் இனி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’ – நீதிபதி தாமஸ்!

Perarivalan case Tamil News: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி 161-வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், … Read more

#எடப்பாடி || தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் மோதிக்கொண்ட கோர காட்சி.!

சேலம் மாவட்டம், எடப்பாடி  அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்ற கல்லூரி பேருந்தும், எடப்பாடியில் இருந்து வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காட்சி அனைத்தும் தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விபத்து நடந்தவுடன் தனியார் பேருந்தில் இருந்த … Read more

ரூட்டு தல மோதல் விவகாரம்…மோதலில் ஈடுபட்ட மேலும் 2 மாணவர்கள் கைது.!

சென்னையில், ரூட்டு தல மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மேலும் 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி ரூட்டு மாணவர்களுக்கும் திருத்தணி ரூட்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அவர்களுள் 2 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரம்பூர் ரூட்டு தல கேங்கைச் சேர்ந்த … Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 19-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். … Read more

TNPSC Group 2: அரை மணி நேரத்திற்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது; தேர்வு அறை விதிமுறைகள் கவனித்தீர்களா?

TNPSC group 2 exam hall tips for aspirants: குரூப் 2 தேர்வுக்கு 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு அறைகளில் அனுமதிக்கப்பட மாட்டார் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்தநிலையில், தேர்வு கூடத்திற்கு எத்தனை மணிக்குச் செல்ல வேண்டும், தேர்வறையில் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது … Read more

#சென்னை || தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேர் அதிரடியாக கைது.!

சென்னையில் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வில்லிவாக்கம், ராஜாஜி நகர் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திலகராஜ் என்பவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை அணிந்திருந்த தங்க நகையை பறித்துச் சென்றது. இதேபோல வினோத் என்பவரின் தங்கச் சங்கிலியையும் இந்த வழிப்பறி கும்பல் பறித்து சென்றுள்ளது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த … Read more

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு – சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார்.!

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படுமென கோவையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருச்சியைச் சேர்ந்த ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். சிபிசிஐடி, சிபிஐ விசாரணை நடத்தியும் இதுவரையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், நேற்று திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து, கோவையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. Source link