அரக்கோணம்: பிறந்து 40 நாட்களேயான குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்கள் ஆன குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ (வயது 22), அம்ச நந்தினி (வயது 20) ஆகியோருக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் யுவன் என்ற ஆண் குழந்தை 40 நாட்கள் முன்பு  பிறந்துள்ளது. குழந்தையின் தந்தை மனோ, சென்னை திருநின்றவூரில் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். கணவன், மனைவி … Read more

பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விளம்பரம்… ட்விட்டர், யூடியூப்பில் நீக்கிட அரசு உத்தரவு

பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் டியோடரண்ட் விளம்பரத்தை, ட்விட்டர் மற்றும் யூடியூப்-லிருந்து நீக்கிட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விளம்பரத் துறையின் சுய-ஒழுங்குமுறை அமைப்பும், லேயர் ஷாட் விளம்பரம் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி, அதனை ஒளிப்பரப்பு செய்வதை நிறுத்திட நிறுவனத்திடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரம், தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறை விதிகளை மீறுவதாக, ட்விட்டர் மற்றும் யூடியூப்பிற்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதனை, பலரும் தங்களது ட்விட்டர் … Read more

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

இளைஞரின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த படாளம் காவல் எல்லைக்குள் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோணிப்பை ஒன்று கிடந்தது. அதில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, கோணிப்பையில் 35 வயதுடைய ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அவரின் உடலை … Read more

இந்த தொழில் செஞ்சா கட்டுகட்டாக பணம்..! மிரண்டு போன போலீஸ்..! சென்னை போலீஸ் அதிரடி..!

சென்னையில் 50 போலியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த மூன்று சகோதரர்கள்  உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 58 லட்சம் ரூபாயை கைப்பற்றி உள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவின்ராஜ், டேனியல் ஆகியோர் கூட்டு சேர்ந்து அலுவலகமே இல்லாமல் GPR Resources என்ற பெயரில் போலி லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளனர். சொந்தமாக ஒரு கண்டெய்னர் கூட இல்லாத நிலையில் தங்களிடம் ஆயிரக்கணக்கில் கன்டெய்னர்கள் இருப்பதாக … Read more

அமெரிக்கா – ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 புராதன கோயில் சிலைகள் தமிழகம் வருகை

கும்பகோணம்: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட, தமிழக கோயில்களுக்கு சொந்தமான 10 சிலைகள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருந்த 10 உலோக சிலைகள், டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், … Read more

திருப்பத்தூர்: சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் தூங்கியபடி பயணம் செய்த நபரால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மேற்கூரையின் மீது படுத்துத் தூங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு ரயில் மீது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ரயில் மேற்கூரையில் படுத்துத் தூங்கியபடி வந்துள்ளார். இதையடுத்து ரயில் விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது இதை பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை … Read more

சென்னையில் ஜூன் 6 முக்கிய பகுதிகளில் மின் தடை – உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் – பள்ளிக்கரணை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவுள்ளது. தாம்பரம் – பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 200 அடி ரெடியல் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, ஐஐடி காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதேபோல், மயிலாப்பூரில் … Read more

இந்தியாவை அதிரவைத்த விளம்பரம்.! ஆபாசத்தின் உச்சம்., பாலியல் வன்கொடுமை., இரட்டை வசனம்.! 

வாசனை திரவிய விளம்பரம் ஒன்றில், பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விதமாகவும், அதனை இளைஞர்களை இரட்டை அர்த்தத்தில் பேச வைத்து, நடிக்க வைத்து எடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்று, பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு 88 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி விவரம் தெரிவிக்கிறது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் சிறுமி ஒருவர் அரசியல் பிரமுகர்களின் மகன்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது. இந்த … Read more

சென்னையில் அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து.!

சென்னையை அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து பட்டாபிராம் தண்டுரை மேம்பாலம் வழியாக சென்ற சமயத்தில், இரு சக்கர வாகனம் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்ணாலை பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருமங்கலத்தில் பாஜக சார்பில் 500 துப்புரவுபணியாளர்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, அரிசி, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதேபோல, கள்ளிக்குப்பத்தில் உள்ள … Read more