ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 5 பேர் படுகாயம்.!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றுக்கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்று திடீரென வலதுபுறமாக திரும்ப முயன்ற போது திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் வலது புறமாக திரும்பிய முயன்றது. அப்போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் ஆம்னி கார் மீது தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார் சாலையோரத்தில் இருந்த கடைக்கு புகுந்த நிலையில் … Read more

‘மதுரையின் நிரந்தர மாவட்டச் செயலாளரே’ – செல்லூர் ராஜூ போஸ்டரால் அதிமுகவில் சலசலப்பு

மதுரை: மதுரை மாநகரில் 22 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டச் செயலாளராக நீடிக்கும் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை வாழ்த்தி, அவரது ஆதரவாளர்கள் மாநகரின் ‘நிரந்தர மாவட்டச் செயலாளரே’ அடைமொழியுடன் ஓட்டிய போஸ்டர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரையில் அதிமுக வட்டாரத்திலிருந்து சிலர் பகிர்ந்தவை: “அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தவரை கட்சியிலும், ஆட்சியிலும் யாரும் நிந்தர அதிகார மையமாக இருக்க முடியாது. கட்சியில் ஜெயலலிதா கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு … Read more

‘20 சவரன் நகையோடு லட்சக்கணக்கில் பணமும் போச்சு’- ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெண் தற்கொலை

சென்னை மணலி புதுநகரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவானி(29). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். சென்னை கந்தன்சாவடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் இன்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த … Read more

பயில்வான்… நீங்க எல்லை மீறி போயிட்டீங்க!’ நேரடியாக கண்டித்த பாடகி சுசித்ரா

சினிமா துறையினர் பற்றி சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்து தனது யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதனை, ‘நீங்கள் எல்லை மீறி போயிட்டீங்க’ என்று பின்னணி பாடகி சுசித்திரா கண்டித்துள்ளார். நடிகர் பயில்வான் ரங்கநாதன், சினிமா துறையில் பணி புரியும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என பலரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைக் கருத்துகளைக் கூறி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இது போன்ற பழைய கிசுகிசு பேச்சுகளுக்கு வழக்கம் போல பார்வையாளர்கள் அதிக … Read more

சிங்கம்புணரி : இருசக்கர வாகனத்தில் புகுந்த விஷப் பாம்பு., ஒன்று கூடிய பொதுமக்கள்.!

சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த விஷப் பாம்பை பொதுமக்கள் ஒன்று அடுத்து கொலை செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனர். சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் பார்த்துள்ளார். அந்த பாம்பு விஷப்பாம்பு என்பதால், அருகில் நின்று … Read more

கருமுட்டை விற்பனை | “ஆந்திரா, கேரளாவுக்கும் அழைத்துச் சென்றனர்” – சிறுமியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி

சேலம்: ஈரோடு சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் விதிமீறல் கண்டறியப்பட்டால் தொடர்புடைய மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தெரிவித்தார். ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவர் உட்பட நான்கு பேரை ஈரோடு போலீசார் கைது செய்து அவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், … Read more

தேனி: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.11 கோடிக்கு மேல் இழந்த பொதுமக்கள்

தேனியில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.11 கோடிக்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை கைது செய்யக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு யுனிவர்சல் டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் தேனியில் தனியார் நிதி நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் … Read more

மயில்சாமி அண்ணாதுரை- கனிமொழி சந்திப்பு: குலசேகரபட்டினம் ராக்கெட் தளம் பணிகள் பற்றி ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் பற்றி மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தூத்துக்குடி எம்.பி கனிமொழியுடன் ஆலோசனை நடத்தினார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மண் ஆய்வு நடந்து வருகிறது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறுகையில், “மாணவர்களின் அறிவியல் முன்னேற்றத்திற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆண்டிற்கு 4-5 கோடி ரூபய் … Read more

ஒரே பிரசவத்தில் 2 கன்னுக்குட்டிகளை ஈன்றெடுத்த பசு.. ஆச்சர்யர்த்துடன் வியந்து பார்க்கும் பொதுமக்கள்.!

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் விஸ்வகர்மா நகரில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார்.  இந்த நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றெடுத்துள்ளது. தற்போது பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பசுவையும், கன்றுகளையும் … Read more

விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. 2018-ம் ஆண்டு ஒத்தகுதிரை பேருந்து நிறுத்தம் அருகே அரசுப்பேருந்து மோதியதில் தாழக்கொம்புதூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த தொகையை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி, கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப்பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி … Read more