மயில்சாமி அண்ணாதுரை- கனிமொழி சந்திப்பு: குலசேகரபட்டினம் ராக்கெட் தளம் பணிகள் பற்றி ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் பற்றி மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தூத்துக்குடி எம்.பி கனிமொழியுடன் ஆலோசனை நடத்தினார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மண் ஆய்வு நடந்து வருகிறது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறுகையில், “மாணவர்களின் அறிவியல் முன்னேற்றத்திற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆண்டிற்கு 4-5 கோடி ரூபய் … Read more

ஒரே பிரசவத்தில் 2 கன்னுக்குட்டிகளை ஈன்றெடுத்த பசு.. ஆச்சர்யர்த்துடன் வியந்து பார்க்கும் பொதுமக்கள்.!

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் விஸ்வகர்மா நகரில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார்.  இந்த நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றெடுத்துள்ளது. தற்போது பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பசுவையும், கன்றுகளையும் … Read more

விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. 2018-ம் ஆண்டு ஒத்தகுதிரை பேருந்து நிறுத்தம் அருகே அரசுப்பேருந்து மோதியதில் தாழக்கொம்புதூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த தொகையை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி, கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப்பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி … Read more

பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சேலம்: ”பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியை வளர்க்கவும், தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டி பேசுவது இயல்பு” என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மை பயக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். ஆனால், சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பெரியகுளத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துகிறோம் என பெரியகுளத்தில் அதிமுக தொண்டர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்துவரும் நிலையில், தொடர்ந்து அதிமுகவின் தலைமை குறித்து அவ்வப்போது பிரச்னை எழுந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அதிமுக-வின் தலைமை குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தயக்கம் காட்டுவது ஏன்? இ.பி.எஸ் எழுப்பும் சந்தேகக் கேள்வி

சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பவானி என்ற இளம் பெண் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு 20 சவரன் நகையை அடகு வைத்தும் சகோதரிகளிடம் இருந்து ரூ. லட்சம் வாங்கி பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான பவானி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால், மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என குரல் எழுந்துள்ளது. … Read more

அங்க குஜராத் மாநில அரசை பாருங்க., ஆனால் இங்க திமுக அரசிற்கு எந்த அக்கறையும் இல்லை – சீமான் ஆதங்கம்.!

விரைவில் மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும் ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளதால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் … Read more

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மதுரை ஆதீனம் முனைகிறார் – அமைச்சர் சேகர்பாபு..!

அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரமாக திருக்கோயில்கள் உள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக கோயில்களில் அரசியல் புகுந்துவிட்டதாக தெரிவித்தார். மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவும் தன்னை குறித்தான செய்தி தொடர்ந்து வெளியாக வேண்டும் என்பதற்காக, சில கருத்துகளை தெரிவிப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். Source link

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடக் கோரி தொடர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

நாமக்கல்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிடக் கோரி ஜூன் 27-ம் தேதி முதல் மாநில தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி. காமராஜ்பாண்டியன் தெரிவித்தார். நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற சங்க பொதுச்செயலாளர் பி. காமராஜ்பாண்டியன் பின்னர் … Read more

சிவகங்கை: கோயில் திருவிழாவில் நடைபெற்ற பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம்

கல்லல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. அழிந்துவரும் பனைமரத்தின் பெருமை குறித்து இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பிளாமிச்சம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவிலும், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றொரு பிரிவிலும் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைச் … Read more