தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மதுரை ஆதீனம் முனைகிறார் – அமைச்சர் சேகர்பாபு..!

அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரமாக திருக்கோயில்கள் உள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக கோயில்களில் அரசியல் புகுந்துவிட்டதாக தெரிவித்தார். மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவும் தன்னை குறித்தான செய்தி தொடர்ந்து வெளியாக வேண்டும் என்பதற்காக, சில கருத்துகளை தெரிவிப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். Source link

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடக் கோரி தொடர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

நாமக்கல்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிடக் கோரி ஜூன் 27-ம் தேதி முதல் மாநில தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி. காமராஜ்பாண்டியன் தெரிவித்தார். நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற சங்க பொதுச்செயலாளர் பி. காமராஜ்பாண்டியன் பின்னர் … Read more

சிவகங்கை: கோயில் திருவிழாவில் நடைபெற்ற பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம்

கல்லல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. அழிந்துவரும் பனைமரத்தின் பெருமை குறித்து இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பிளாமிச்சம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவிலும், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றொரு பிரிவிலும் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைச் … Read more

சென்னையில் செவ்வாய்க்கிழமை மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் அறிவித்துள்ளது. மயிலாப்பூர், தி.நகர், அரும்பாக்கம், போரூர், தாம்பரம், செம்பியம், தொண்டியார்பேட்டை, பொன்னேரி மற்றும் பன்ஜெட்டி ஆகிய இடங்களில் மின்வெட்டு இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் பகுதியில் பாரதி சாலை, ஆயில் மோங்கர் தெரு, தானப்பா தெரு, ஜெனரல் சாமி தெரு … Read more

சிறுமியை கடத்தி சீரழித்த வாலிபர்.. தந்தை-மகன் போக்சோவில் கைது.!

சிறுமியை கடத்திய தந்தை மகன் இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனிப்படை அமைத்து … Read more

“தாத்தா, மகன், பேரன்… வாரிசு அரசியல் செய்வதுதான் திராவிட மாடலா?” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ”உதயநிதியை முன்னிலைப்படுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடலா,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருவேடகத்தில் கிளை நிர்வாகிகளுக்கு தீர்மானம் புத்தகம் வழங்கும் விழா மற்றும் டிஜிட்டல் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேசியது: ”கருணாநிதி குடும்ப ஆதிக்கத்தின் பிடியிலிருந்து ஏழை எளிய மக்களை காப்பாற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். இந்த 50 ஆண்டு கால … Read more

மதுரை: நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்

அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி மன்ற நிதியை முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை பதவிநீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த சர்மிளாஜி என்பவர் இருந்து வருகிறார். இவர், ஊராட்சி மன்ற தலைவராக செயல்படத் தொடங்கிய 40 நாட்களில் ஊராட்சி நிதியை முறைகேடாக தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி முறைகேடு செய்துள்ளதாகக் … Read more

இப்படியே இதை விடக்கூடாது…! தமிழக முதல்வருக்கு, ஆளும் கட்சியின் கூட்டணி கட்சி தலைவர் எழுதிய பரபரப்பு கடிதம்.!

அதிகரிக்கும் பெண் கருக்கொலை மற்றும் கருமுட்டை விநியோகத்தை தடுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இன்று (06.06.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக பாலின தேர்வின் அடிப்படையில் பெண் கரு கலைப்பு நடந்துள்ளதாகவும், 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஸ்கேன் மையங்கள், மருத்துவர்கள் உட்பட … Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… இதை மட்டும் செய்தால் மாதம் 24 டிக்கெட் வரை புக் பண்ணலாம்!

maxiam limit for booking ticket through irctc increased, ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதற்கான வரம்பை இந்தியன் ரயில்வே அதிகரித்துள்ளது. ஐஆர்சிடிசி கணக்கை ஆதர் எண்ணுடன் இணைத்தவர்கள் மாதம்தோறும் 24 டிக்கெட்டுகளை புக் செய்யலாம். ரயில் பயணிகள் ஐஆர்சிடிசி தளம் மூலம் மாதம் தோறும் 24 டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்ய முடியும் என்ற கட்டுபாடு இதுவரை இருந்தது குறிப்பிடதக்கது. நீங்கள் இன்னும் … Read more

ஊராட்சி நிதியை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்.!

மதுரை அலங்காநல்லூர் அருகே ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த புகாரில் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து ஆட்சியர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். கோட்டைமேடு ஊராட்சியில் தலைவராக இருந்த சர்மிளா ஊராட்சி நிதி 10 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை 2020-ம் ஆண்டு தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இதுதொடர்பாக கிராம மக்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்ததையடுத்து அவர் மீது நடவடிக்கை … Read more