தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து! முதலிடத்தில் தமிழ்நாடு! வெளியான அதிர்ச்சி புள்ளிவிபரம்

2020ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நிகழ்ந்த 10 மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நிகழ்ந்த முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரம், முந்தைய 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளை விட 2020ஆம் ஆண்டில் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 17,633 விபத்துகள் நிகழ்ந்த நிலையில், … Read more

இந்த ஓவியத்தில் முதலில் என்ன பார்த்தீங்க? உங்கள் துணையிடம் நீங்க வெறுப்பது எது?

நெட்டிசன்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதன் அடிப்படையில் ஒருவரின் ஆளுமையைக் குறிப்பிடுவதால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மற்றும் ஓவியங்கள் சில நேரங்களில் நமக்குத் தெரியாத எண்ணங்களையோ அல்லது நாம் கட்டுப்படுத்த முயற்சிக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தலாம். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம், உங்கள் துணைவரைப் பற்றி நீங்கள் வெறுக்கும் விஷயங்கள் எவை என்று … Read more

உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் எச்சரித்தும் இவர்கள் மட்டும் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது – மருத்துவர் இராமதாஸ்.!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உள்ள 49 உதவிப் பேராசிரியர் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ஆள்தேர்விலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் எத்தனை முறை எச்சரித்தாலும் கூட இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐ.ஐ.டி நிர்வாகங்கள் மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை ஐஐடி மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.டிகள், ஐ.ஐ.எம்களிலும் சமூகநீதி … Read more

மகன் தற்கொலையால் மன உளைச்சல்… கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்கள்.!

23 வயது மகன் தற்கொலை செய்து இறந்த துக்கம் தாங்காமல் வயது முதிர்ந்த பெற்றோர் உடலில் துணியை கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் சமத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி தனலெட்சுமி என்பது விசாரணையில் தெரியவந்தது. 62 வயதான ஆறுமுகம் பொள்ளாச்சியில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணியாற்றி இரண்டு மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். 59 வயதான அவரது மனைவி தனலெட்சுமி காதி கிராப்டில் பணியாற்றி … Read more

இளம்பெண் தற்கொலை | யாருடைய அழுத்தத்தால் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தயக்கம்? – அரசுக்கு இபிஎஸ் கேள்வி

சென்னை: “ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தயக்கம் ஏன்?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் சென்னை இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் குறிப்பிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தயக்கம் ஏன் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் “சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஓர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது எனவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  எனவே ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், பள்ளி திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து … Read more

180 கி.மீ. நீளம், 4,500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய தாவரம்!

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஷார்க் விரிகுடாவின்’ உலக பாரம்பரியப் பகுதியில், ஆழமற்ற நீரில் பாசிடோனியா ஆஸ்ட்ராலிஸ் (Posidonia australis) என்ற ஒற்றைத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டது. நம்பமுடியாத அளவிற்கு நீளம் கொண்ட கடல்புல்லின் பழங்கால மாதிரி 180 கி.மீ ஆகும். இது குறைந்தது 4,500 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (UWA) மற்றும் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷார்க் விரிகுடாவில் இருந்து கடல் புல் தளிர்களின் மாதிரிகளை எடுத்து 18,000 க்கும் மேற்பட்ட மரபணு … Read more

யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி.!

இன்று அதிகாலையில் சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பவானி என்ற தனியார் நிறுவன ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிக தொகையை  இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து மக்கள் தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகளை தமிழக அரசும் மறுக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காவல்துறையின் தலைமை … Read more

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் – போக்குவரத்து துறை அமைச்சர்.!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். Source link

தென்னிந்தியாவில் முதன்முறை | முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த மாற்றுத் திறனாளிகள் அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சங்கள்

சென்னை: 21 வகையான மாற்றுத் திறன் கொண்டவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், ஒன்றுகூடி வாழவும், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் உதவி உபகரணங்களை உபயோகப்படுத்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலையும் பெற உதவும் வகையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியம் தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. (முக்கிய அம்சங்கள் – கீழே). இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் … Read more