180 கி.மீ. நீளம், 4,500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய தாவரம்!

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஷார்க் விரிகுடாவின்’ உலக பாரம்பரியப் பகுதியில், ஆழமற்ற நீரில் பாசிடோனியா ஆஸ்ட்ராலிஸ் (Posidonia australis) என்ற ஒற்றைத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டது. நம்பமுடியாத அளவிற்கு நீளம் கொண்ட கடல்புல்லின் பழங்கால மாதிரி 180 கி.மீ ஆகும். இது குறைந்தது 4,500 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (UWA) மற்றும் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷார்க் விரிகுடாவில் இருந்து கடல் புல் தளிர்களின் மாதிரிகளை எடுத்து 18,000 க்கும் மேற்பட்ட மரபணு … Read more

யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி.!

இன்று அதிகாலையில் சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பவானி என்ற தனியார் நிறுவன ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிக தொகையை  இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து மக்கள் தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகளை தமிழக அரசும் மறுக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காவல்துறையின் தலைமை … Read more

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் – போக்குவரத்து துறை அமைச்சர்.!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். Source link

தென்னிந்தியாவில் முதன்முறை | முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த மாற்றுத் திறனாளிகள் அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சங்கள்

சென்னை: 21 வகையான மாற்றுத் திறன் கொண்டவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், ஒன்றுகூடி வாழவும், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் உதவி உபகரணங்களை உபயோகப்படுத்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலையும் பெற உதவும் வகையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியம் தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. (முக்கிய அம்சங்கள் – கீழே). இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் … Read more

முருகனுக்கு பரோல் கோரிய மனு நிராகரிப்பு – சிறைத்துறை தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பரோல் வழங்கக் கோரிய வழக்கை நளினி வாபஸ் பெற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும்,  ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என … Read more

நயன் – விக்கி திருமணம்… முகூர்த்த நேரம், பங்கேற்கும் பிரபலங்கள் யார்?

nayanthara Vignesh Shivan Marriage Update : தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஜோடியான விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் வரும் 9-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது , மகாபலிபுரத்தில் உள்ள மஹாப்ஸ் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்காக வரும் ஜூன் 8-ந் தேதி திருமண வரவேற்பு  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரவேற்பு … Read more

அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது குழப்பத்தை அதிகரிக்கிறது – டாக்டர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது குழப்பத்தை அதிகரிக்கிறது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த 30-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை … Read more

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 10 ஐம்பொன் சிலைகள் மீட்பு.. கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு..!

தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 10 ஐம்பொன் சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் மீட்டு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தஞ்சை புன்னை நல்லூர் கைலாசநாதர் கோவிலின் நடராஜர் சிலை, நெல்லை ஆழ்வார்குறிச்சி கோவிலின் கங்காள மூர்த்தி மற்றும் நந்திகேஸ்வரர் சிலைகள் உள்ளிட்ட 10  ஐம்பொன் சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. அவை வெளியுறவு துறை மூலம் தமிழக டிஜிபியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் … Read more

தமிழகத்தில் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதித் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி … Read more

கிருஷ்ணகிரி: சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த வீடுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சந்தம்பட்டி கிராமத்தில் வீடுகள், மா, தென்னை, முருங்கை மரங்கள் உடைந்து சேதமடைந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. நேற்று போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாதாரண மழையால் இல்லாமல் ஆலங்கட்டி மழையாக பெய்தது. இந்நிலையில் சந்தம்பட்டி கிராமத்தில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் ஓடு போர்த்திய வீடு சூறாவளி காற்றால் தூக்கி … Read more