பெரும் மனவேதனையில் எடப்பாடி கே பழனிச்சாமி.! 

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  “கடலூர் அருகே கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த  மோனிசா, சங்கவி, சுமிதா, காவியா, பிரியதர்ஷிணி, நவநீதம் மற்றும் பிரியா, ஆகிய 7 பேர் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன். … Read more

கும்மிடிப்பூண்டி அருகே 5 இருசக்கர வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைப்பு.. போலீசார் விசாரணை.!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 5 பைக்குகளுக்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேர்வழி கிராமத்தில் குமார் என்பவரது கடை முன்பாக அதிகாலை 2 மணியளவில் பைக்குகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளன. அதனை பார்த்த ஒருவர் உடனடியாக கடையின் பின்புறம் தூங்கிக்கொண்டிருந்த குமாரிடம் தெரித்துள்ளார். பின்னர் குமார் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற கும்மிடிப்பூண்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்மநபர்கள் … Read more

சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமருக்கு நன்றி: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமருக்கு நன்றி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காஞ்சி கோஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர் ரவி காஞ்சி கோஷ் கண்காட்சி தொடக்க விழாவில் பாரதத்தின் சனாதன கலாச்சார ஆன்மிகத்திற்கு சேவை செய்வதில் காஞ்சி பீடத்தின் மகத்தான பங்களிப்பை எடுத்துரைத்தார். பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள் மற்றும் முனிவர்களால் … Read more

'திமுக அரசை பணிய வைக்க பாஜக முயல்கிறது; அது நடக்காது' – முத்தரசன்

தமிழக மக்களுக்கு எதிராக ஆளுநர், தமிழக பாஜக, மத்திய அரசு என இந்த முக்கூட்டணி சேர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார் முத்தரசன். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிசிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  இரா.முத்தரசன் கூறுகையில், ”தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 21 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. இது தொடர்பாக தமிழக முதல்வர் நேரிலேயே ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை … Read more

1 மில்லியன் பழைய கார்களை திரும்ப பெறுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு

Mercedes to recall about 1 million older models worldwide: பிரேக் பூஸ்டரில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் காரணமாக உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பழைய கார்களை திரும்பப் பெறுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 2004 முதல் 2015 வரை தயாரிக்கப்பட்ட எம்எல், ஜிஎல் (பிஆர் 164) மற்றும் ஆர்-கிளாஸ் (பிஆர் 251) சீரிஸ் மாடல்கள் இந்த பிரேக் பூஸ்டர் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 70,000 கார்கள் ஜெர்மனியில் உள்ளன. … Read more

விழுப்புரம் இளைஞர் சாலை விபத்தில் பலியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.!

புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், நைனார்பாளையம் சேர்ந்த புகழேந்தி என்பவர், புதுச்சேரியில் பேட்டரி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த புகழேந்தி, திருச்சிற்றம்பலம் அருகே பின்னால் வந்த லாரி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது … Read more

டூத் பிரஷ்ஷால் சிக்கிய சூப்பர் மார்க்கெட் ஊழியர்.. பல லட்ச ரூபாய் மோசடி கண்டுபிடிப்பு..!

சென்னையில் டூத் பிரஷை மாற்ற வந்த வாடிக்கையாளரால், சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற லட்சக் கணக்கான ரூபாய் பண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 40 ஆண்டுகளாக மாயா ராம் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளரான சுரேஷ் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ராஜேஷ் என்ற தனது ஊழியர், தவறான கணக்கு காட்டி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பாக கூறியிருந்தார். வழக்கமாக … Read more

தனுஷ்கோடி கடற்கரையில் தூய்மைப் பணிகள்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த கடல் பசு மணல் சிற்பம்

ராமேசுவரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடியில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் அழிந்து வரும் அரியவகை கடல் வாழ் உயிரினமான கடல்பசுவை காக்கும் வகையில் வரையப்பட்டிருந்த மணல் சிற்பம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்து கலந்து … Read more

ஜி ஸ்கொயர் முன்னேற்றக் கழகம்… ஊழல் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை!

தமிழகத்தில் பாஜக தலைவரான அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலம் ஆகியிருக்கிறது. அனைத்திடத்திலும் மக்களிடையே திராவிட மாடலை தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் லஞ்சம் ஊழல் அனைத்திடத்திலும் தலைவிரித்து ஆடுகிறது என்கிற ஒரு குற்றசாட்டை பாரதிய ஜனதா கட்சி வைத்திருந்தது. பல இடங்களில், முதல்வர் இதை சரிசெய்வதாக சொல்லியிருந்தாலும், இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதில் பல அமைச்சர்களுக்கும் அல்லது முதல்வருடைய குடும்பத்திற்கும் கூட … Read more

இறங்கிவந்தா அடிப்பீங்க சார்., நான் வரமாட்டேன் சார்., அடம்பிடித்த முதியவர்., வாணியம்பாடியில் பரபரப்பு.!

வாணியம்பாடி சரக்கு ரயில் கண்டைனர் மீது ஏறி  பயணித்த நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயிலின் கண்டைனர் பெட்டி மீது ஏறிய முதியவர் ஒருவர், நின்றபடியே பயணம் செய்துள்ளார். இதனை பார்த்த பயணிகள் உடனடியாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார் வாணியம்பாடி ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைபாதையில் ரயிலை நிறுத்தினர். தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர்., பின்னர் … Read more