கமலாலயத்தில் அண்ணாமலை பிரஸ் மீட்… யூடியூப் சேனல்களுக்கு அனுமதி கிடையாது

சில தினங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வெளியிடுவோம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று(ஜூன் 5) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலையின் செய்தியாளர்களை சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழக பாஜக மாநில ஊடகப்பிரிவு தலைவர் பி ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் ஊடக நண்பர்கள் அனைவரும் … Read more

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தது சூதாட்ட சொகுசு கப்பலா? கோவை லாட்டரி தொழிலதிபருக்கு நன்றிக்கடனா? பரபரப்பு தகவல்.!

புதுவை கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ஆன்மிக பூமியாக திகழும் புதுவையின் புகழை சீர்குலைக்கும் வகையில் கேசினோ சூதாட்ட கப்பலுக்கு தமிழக திமுக அரசு அனுமதியளித்துள்ளது. தேர்தலுக்கு உதவிய கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த கப்பலுக்கு தமிழக திமுக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த தனியார் கப்பல் பயணத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். உல்லாச பயணம் என்ற போர்வையில் இயக்கப்படும் கப்பலில் … Read more

கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் பலி..!

கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் பலி தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினர் திருமணமாகி ஒரே மாதமான இளம்பெண்ணும் பலி கடலூர் நெல்லிக்குப்பத்தை அடுத்த அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் 4 சிறுமிகள், 3 பெண்கள் நீரில் மூழ்கி பலி குச்சிப்பாளையத்தில் உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது 4 சிறுமிகளும், 3 பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழப்பு தடுப்பணையின் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில் சிறுமிகளும், இளம்பெண்களும் தண்ணீரில் மூழ்கியதாக சொல்லப்படுகிறது … Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்ட கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமேஸ்வரம் அருகே மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறைக்குயினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் … Read more

நடை பகுப்பாய்வு என்பது என்ன? இது குற்றங்களை கண்டறிய எவ்வாறு உதவுகிறது?

Sadaf Modak Gait analysis explained: How the way you walk can point to your role in crime: மும்பை நகரின் சாகி நாகா பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக 44 வயது ஆணுக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நீதிமன்றம் நம்பியிருந்த ஆதாரங்களில், “நடை பகுப்பாய்வு” அறிக்கையும் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த, குற்றஞ்சாட்டப்பட்டவர் நடந்து செல்லும் விதத்தின் … Read more

காயிதே மில்லத் அவர்களின்  127-ஆவது பிறந்தநாளில் அவரது தேசப்பற்றையும், தமிழ்ப் பற்றையும் போற்றுவோம் – மருத்துவர் இராமதாஸ்.!

காயிதே மில்லத் அவர்களின்  127-ஆவது பிறந்தநாளில் அவரது தேசப்பற்றையும், தமிழ்ப் பற்றையும் போற்றுவோம் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தேசத் தலைவர்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 127-ஆவது பிறந்தநாள் இன்று.  தேசத்தையும், தமிழையும் அவர் அளவுக்கு நேசித்தவர்களும், அதற்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. அவரது பிறந்தநாளில்  அவரது தமிழ்ப் பற்றை போற்றுவோம்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இதேபோல், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள … Read more

பைக் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

வேலூர் காட்பாடி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பெருமாள்குப்பம் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளி கோவிந்தராஜ் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் சைடு லாக்கை உடைத்த மர்மநபர்கள் 3 பேர் அதை எடுத்துச்செல்ல முயன்றுள்ளனர். அதை பார்த்த கோவிந்தராஜ் கூச்சலிடவே, தப்பியோடிய மூவரையும்  ஊர்ப் பொதுமக்கள் துரத்திச்சென்றனர். ஒருவன் மட்டுமே பிடிபட்ட நிலையில் அவனை நையப்புடைத்த அவர்கள் மேல்பாடி போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். தப்பியோடிய … Read more

இலங்கை தமிழர்களுக்கான உதவிகள்: மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை

புதுச்சேரி: இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் குறித்து மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார். மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்துவருகிறார். இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் குறித்து மத்திய அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசாங்க திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான பல்வேறு ஆலோசனை … Read more

‘நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சிபெற அனுமதிக்கவில்லை’: மூத்த தளகட வீரர் புகார்

சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற, சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் அனுமதிக்கவில்லை என திண்டுக்கல்லை சேர்ந்த 79 வயதான வீரர் புகார் தெரிவித்துள்ளார். வருகிற 29 ஆம் தேதி பின்லாந்தில் நடைபெற உள்ள உலக அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் 195 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா சார்பில் 75 முதல் 80 வயதோருக்கான போல்வால்ட் போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 79 வயதான சுப்பிரமணி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். … Read more