அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால்… அண்ணாமலையை கிண்டல் செய்த அமைச்சர் மா.சு

தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்து மாவு டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்” என்று கிண்டல் செய்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசில், மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி வந்தார். மேலும், திமுக அரசில் நடந்த ஊழல்களின் பட்டியலை வெளியிடுவதாக … Read more

#BigBreaking || தமிழக மக்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இந்த துயர … Read more

கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்தில் ஆவின் ஹெல்த் மிக்ஸை சேர்க்க வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்துப் பொருட்கள் தொகுப்பில், ஆவின் ஹெல்த் மிக்சைச் சேர்க்க வேண்டும் என்றும், அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தின் புரோ பி.எல் மிக்ஸ்-க்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆவினில் ஹெல்த் மிக்ஸ் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திடம் வாங்கினால் அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார். Source … Read more

ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை: செயல்பாட்டுக்கு வந்தது விற்பனை இயந்திரம்

சென்னை: ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரம் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக … Read more

வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி அளிக்கும் வனத்துறை

தமிழகத்தில் முதல்முறையாக வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டையாட  பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உடலில் காயங்களுடன்  இறக்கும் தருவாயில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டது. 8 மாதமே  ஆன அந்த புலிக்குட்டியின்  உடலில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி இருந்த நிலையில், தனிக் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஓன்றரை வயதான (16  மாதம்) அந்த புலிக் குட்டி ஆரோக்கியத்துடன் இருந்து வரும் … Read more

தமிழகத்தில் புதியதாக 2 வைரஸ்கள் தொற்று; 12 பேர் பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக பிஏ4, பிஏ5 ஆகிய 2 வைரஸ்கள் பரவியுள்ளதாக பரவத் தொடங்கியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “புதியதாக உருமாற்றம் பெற்றுள்ள தமிழகத்தில் தென்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக ஒமிக்ரான் என்கிற வைரஸ், பிஏ1, பிஏ2, பிஏ3, பிஏ4, பிஏ5 என ஒரு 7 வைகளில் இருக்கிறது என்று உலகம் முழுவதும் சொல்லப்பட்டு … Read more

பெரும் மனவேதனையில் எடப்பாடி கே பழனிச்சாமி.! 

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  “கடலூர் அருகே கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த  மோனிசா, சங்கவி, சுமிதா, காவியா, பிரியதர்ஷிணி, நவநீதம் மற்றும் பிரியா, ஆகிய 7 பேர் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன். … Read more

கும்மிடிப்பூண்டி அருகே 5 இருசக்கர வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைப்பு.. போலீசார் விசாரணை.!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 5 பைக்குகளுக்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேர்வழி கிராமத்தில் குமார் என்பவரது கடை முன்பாக அதிகாலை 2 மணியளவில் பைக்குகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளன. அதனை பார்த்த ஒருவர் உடனடியாக கடையின் பின்புறம் தூங்கிக்கொண்டிருந்த குமாரிடம் தெரித்துள்ளார். பின்னர் குமார் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற கும்மிடிப்பூண்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்மநபர்கள் … Read more

சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமருக்கு நன்றி: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் ஒரே குடும்பமாக உருவாகி வருவதற்கு பிரதமருக்கு நன்றி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காஞ்சி கோஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர் ரவி காஞ்சி கோஷ் கண்காட்சி தொடக்க விழாவில் பாரதத்தின் சனாதன கலாச்சார ஆன்மிகத்திற்கு சேவை செய்வதில் காஞ்சி பீடத்தின் மகத்தான பங்களிப்பை எடுத்துரைத்தார். பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள் மற்றும் முனிவர்களால் … Read more

'திமுக அரசை பணிய வைக்க பாஜக முயல்கிறது; அது நடக்காது' – முத்தரசன்

தமிழக மக்களுக்கு எதிராக ஆளுநர், தமிழக பாஜக, மத்திய அரசு என இந்த முக்கூட்டணி சேர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார் முத்தரசன். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிசிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  இரா.முத்தரசன் கூறுகையில், ”தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 21 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. இது தொடர்பாக தமிழக முதல்வர் நேரிலேயே ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை … Read more