பழநி முருகன் கோயில் நிதி மூலம் திருமண மண்டபம் கட்டுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்: ஐகோர்ட் மதுரை அமர்வு

மதுரை: பழநி முரு​கன் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டும் விவகாரத்​தில், தற்​போதைய நிலையே தொடர வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை எழு​மலை​யைச் சேர்ந்தராம ரவிக்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: பழநி தண்​டா​யுதபாணி சுவாமி கோயிலுக்​குச் சொந்​த​மான நிதி​யில் இருந்து ரூ.4.54 கோடி மதிப்​பில், உத்​தமபாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்ளது. இது அறநிலை​யத் துறை விதி​களுக்கு எதி​ரானது. கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்டக் … Read more

அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் கவனத்திற்கு! தமிழக அரசு செய்துள்ள மாற்றம்!

கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது வெறும் சலுகை அல்ல, அது அரசின் கடமை என்பதை சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

சிவகாசி: சிவ​காசி​யில் பட்​டாசு ஆலை உரிமை​யாளர்களின் வீடு மற்றும் அலு​வல​கங்​கள், டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் 2-வது நாளாக நேற்​றும் வரு​மான வரி சோதனை நடை​பெற்​றது. சிவ​காசி​யில் உள்ள 2 பட்​டாசு நிறுவன உரிமை​யாளர்​களின் வீடு​கள் மற்றும் அலு​வல​கங்​கள், சிவ​காசி​யில் இருந்து வடமாநிலங்​களுக்கு பட்​டாசுகளை கொண்டு செல்​லும் 2 டிரான்​ஸ்​போர்ட் நிறுவனங்கள் உட்பட 8 இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் குழுவினர் நேற்று முன்​தினம் காலை 10 மணி முதல் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்த சோதனை​யில் பட்​டாசு விற்​பனை … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரியில் இன்று கனமழை

சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தொடர்ந்து 48 மணி நேரத்தில் இது வலுவடையக்கூடும். தென்னிந்தியப் பகு​தி​களின் … Read more

சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நம் நாட்டின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். இதுதவிர, ஊராட்சி மன்ற … Read more

அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதமானது: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்

விழுப்புரம்: செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆக.12) கடிதம் அனுப்பியுள்ளார். பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பொதுக்குழுக் கூட்டத்தை தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தி முடித்தார். இக்கூட்டத்தில், பாமக தலைவராக அவர் ஓராண்டுக்கு நீட்டிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று … Read more

”மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிப்போம்” – கிருஷ்ணகிரியில் இபிஎஸ் உறுதி

கிருஷ்ணகிரி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிப்போம் என கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ மூன்றாம் கட்ட பிரச்சாரத்தின் 2-வது நாளான இன்று (ஆக.12) கிருஷ்ணகிரியில் ரவுண்டானா பகுதியில் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ”திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும் என பேசியுள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் கோவை, … Read more

பி.எட்., படிப்பு: மாணவர் சேர்க்கை ஆணையை டவுன்லோட் செய்வது எப்படி?

Tamil Nadu Government: இந்த கல்வியாண்டுக்கான பி.எட்., மாணாக்கர் சேர்க்கை ஆணையை இணைய வழியில் நாளை முதல் (ஆக. 13) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரயில்கள் தாமதம்

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராமேசுவரம் வரவேண்டிய ரயில்களும், ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திறந்து வைத்தார். ஏப்ரல் 7-ம் தேதி முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி, கோவை மற்றும் வடமாநிலங்களுக்கும் ரயில் சேவைகள் நடைபெறுகின்றன. இந்த புதிய ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் … Read more

ராம பகவான் பைத்தியமா? பாடலாசிரியர் வைரமுத்து பேச்சால் எழுந்த சர்ச்சை!

Vairamuthu Lord Ram Controversy : கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, ராமர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்த முழு விவரம், இதோ.