கமல்ஹாசனை மிரட்டும் கன்னடர்கள்: முதலமைச்சர் வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி!

‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்: பின்னணி என்ன?

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1-ம் தேதி கட்சிப் பொதுக்குழுவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல், அதற்கு போட்டியாக அதிமுக கவுன்சிலர்கள் துணையுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியதற்கு மூளையாக செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே மோதல்.. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இந்திராணி … Read more

அதிமுக கவுன்சிலரை ஓங்கி அறைந்த திமுக பெண் கவுன்சிலர்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலரை திமுக பெண் கவுன்சிலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

‘நடிகர் ராஜேஷ் சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டியவர்’ – முத்தரசன் புகழஞ்சலி

சென்னை: மார்க்சிசம் – லெனினிசக் கொள்கை மீது பற்றுக் கொண்டவர் மறைந்த நடிகர் ராஜேஷ், அந்த கொள்கை வலுப்பெற வேண்டும் என அக்கறை காட்டிய செயல்பாட்டாளர் என்று முத்தரசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: “தமிழ் திரையுலகில் தனி முகமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் (75) இன்று (29.05.2025) காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் அணைக்காட்டை பூர்வீகமாக கொண்ட வில்லியம் – வில்லி கிரேஸ் தம்பதியர் மன்னார்குடியில் வாழ்ந்த … Read more

தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள், பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ்

Tamilnadu Government : சென்னையில் டிஜிட்டல் விளம்பரம் செய்வது தொடர்பாகவும், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இரண்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

கட்சி நன்கொடை அறிக்கை: தமாகா மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். … Read more

பாஜகவுடன் கூட்டணி வைக்குமாறு அன்புமணி, சவுமியா அன்புமணி கெஞ்சினர் – ராமதாஸ்

Ramadoss, Anbumani Ramadoss : அன்புமணி ராமதாஸ் மீது சரிமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் தைலாபுரத்தில் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

நடிகர் ராஜேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமான நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ் . கலைஞர் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். அவரும், ராஜேஷின் திருமணம் … Read more

சென்னை கிண்டி ஐடிஐ, மகளிர் ஐடிஐ, வட சென்னை ஐடிஐ கல்லூரிகளில் சேர வேண்டுமா?

Tamilnadu Government : சென்னை கிண்டி ஐடிஐ, கிண்டி மகளிர் ஐடிஐ கல்லூரி, வட சென்னை ஐடிஐ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வீட்டுக்கு குண்டுமிரட்டல்

சென்னை: சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி மற்றும் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலுவலகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழி சாலையில் உள்ள தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி வீட்டில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. … Read more