திருப்பத்தூர்: மனைவி சாவில் மர்மம் .. புகாரில் கைதான கணவர் சிறையில் மூச்சுத்திணறலால் மரணம்

திருப்பத்தூரில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில்பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மருமகன், 3 நாட்களில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி(26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் … Read more

வெற்றிலையை நீரில் கொதிக்க வைத்து… இவ்வளவு நன்மை இருக்கு!

Tamil Health Update Betel Leaves Benefits :பழங்காலத்தில் சாப்பிட்டபின் வெற்றிலை பாக்கு மெல்லுவது அனைவருக்கும் பொதுவான பழக்கமாக இருந்தது. நாளடைவில், இந்த பழக்கம் கெட்டது என்று சொல்லி பலரும் கைவிட்டனர். ஆனால் இன்றளவும் வயதானவர்கள் பலரும் வெற்றிலை பாக்கு மெல்லுவதை தனது வாழ்நாள் பழக்கமாக வைத்துள்ளனர். வெற்றிலை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது ஆனாலும் இதனை அறியாத சில வெற்றிலை பாக்கு நல்ல பழக்கம் அல்ல என்று சொல்லி தடுத்துவிடுகின்றனர். ஆனால் வெற்றிலை உடலுக்கு மட்டுமல்லாமல் … Read more

சென்னை புத்தக காட்சி, நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்.!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சியை நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், 45-வது சென்னை புத்தக காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நாளை முதல் நடைபெறும் என்று தெரித்தனர். மேலும் இப்புத்தக காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தனர்.  மேலும், … Read more

சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்..! தீவிர வாக்குச் சேகரிப்பில் வேட்பாளர்கள்..! <!– சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்..! தீவிர வாக்குச் சேகரிப்ப… –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்களிடையே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய வண்ணாரபேட்டை பகுதி 48 மற்றும் 53வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது துணி தைத்தும், கறி வெட்டியும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் மக்களிடையே வாக்கு சேகரித்தார்.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியின் 37வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு … Read more

தமிழக ஆளுநர், பிரதமரை சீண்டுவது பொறுப்புமிக்க அரசுக்கு அழகல்ல: அண்ணாமலை

தஞ்சாவூர்: “தமிழக ஆளுநர், பிரதமரை சீண்டுவது போன்றவை பொறுப்புமிக்க அரசுக்கு அழகல்ல” என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவி்த்தார். தஞ்சாவூரில் இன்று பாஜக வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: ”பாஜகவுக்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதேநேரத்தில் திமுக அரசு மீது மக்களிடையே சலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைக் கூறி வருகின்றனர். இதற்காக திமுகவினர் வீடு, வீடாகச் செல்கின்றனர். இதற்கான அரசாணையோ, பட்ஜெட்டோ போடாமல் … Read more

தேனி: ஒரு வருட தடை நீக்கப்பட்டு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொரோனா தொற்றால் ஒரு வருடமாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கும்பக்கரை அருவியில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தொடங்கியதன் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடைவிதித்தனர். இந்நிலையில் நோய் தொற்று குறைந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை … Read more

Tamil News Today LIVE: திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை திரும்பப் பெற முடியாது – ஐகோர்ட் திட்டவட்டம்

Go to Live Updates Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 103-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.40காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் வினாத்தாள்கள் லீக்! 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் மீண்டும் கசிந்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெறக்கூடிய உயிரியல், வணிக கணிதம் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது. எல்.ஐ.சி பங்கு விற்பனையில் மத்திய அரசு மும்முரம் காட்டக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எல்.ஐ.சி பங்கு விற்பனை நடவடிக்கையை மத்திய … Read more

போர் பதற்றம்: உக்ரைனில் தவிக்கும் இந்தியரை உடனே மீட்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்.!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா எந்த நிமிடமும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் இரு நாட்டு எல்லையில், குறிப்பாக உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வரும் நிலையில், அவர்களின் நிலை என்னவாகும் என்ற கவலை அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா சோசலிசக் குடியரசின் அங்கமாக ஒரு காலத்தில் இருந்து, … Read more

தமிழகத்தில் 75 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு- தமிழக அரசு <!– தமிழகத்தில் 75 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு… –>

தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. Source link

திருச்சியில் வாக்குச்சாவடிகளுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில், கரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 401 வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் பிப்.19ம் தேதி நடைபெறவிருகிறது. இந்தத் தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,262 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, துறையூர் நகராட்சி 10-வது வார்டு, … Read more