மணப்பாறை: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்து – மூன்று பேர் பலி

மணப்பாறை அருகே சமயபுரத்திற்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது தக்காளி லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் மாலையில் பாதையாத்திரையாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு, புறப்பட்டனர். இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது, திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டியான்பட்டி அருகே சாலையோரம் நடந்து சென்ற பக்தர்களுக்கிடையே தக்காளி ஏற்றிச் சென்ற லாரி புகுந்தது. … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை.. ஜாமீனில் வெளியே வந்த சகாய மேரியை சால்வை போர்த்தி வரவேற்ற திமுக எம்.எல்.ஏ!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி ஜாமீனில் வெளியே வந்தபோது, அவரை தமிழகத்தில் ஆளும் திமுகவின் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் நேரில் சென்று வரவேற்றார். தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 62 வயதான சகாய மேரிக்கு, தஞ்சை நீதிமன்றம் ஜாமீன் வழயங்கியதை அடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு’ திருச்சி (கிழக்கு) திமுக எம்எல்ஏ இனிகோ … Read more

#சற்றுமுன் || வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தமிழக அரசு கோரிக்கை.!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய தமிழகத்தின் பெருங்குடியான வன்னியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் இன மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, வன்னியர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு … Read more

1 கி.மீ தூரத்திற்கு கேட்ட பலத்த சப்தம்.. பட்டாசு வெடித்ததில் தரைமட்டமான கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு <!– 1 கி.மீ தூரத்திற்கு கேட்ட பலத்த சப்தம்.. பட்டாசு வெடித்தத… –>

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், பட்டாசு திடீரென வெடித்து சிதறியதில், கட்டிடம் தரைமாட்டமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என தேடும் பணி நடைபெற்று வருகிறது. தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.. அனுமதி பெற்று பட்டாசு தயாரிக்கும் பணி நடந்ததா? என விசாரணை நடைபெற்றுவருகிறது Source link

தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87%… எஞ்சியோர் கவனம்… – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: ‘தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87 விழுக்காடாக உள்ளது. எஞ்சிய 13 விழுக்காடு மக்கள் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும்‘ என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ” கரோனா தொற்று கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முறைகளை படிப்படியாக மாற்றுவதற்காக , பொது சுகாதார இயக்குநர் மற்றும் வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து வருகிறோம். முதலில் நோய்த் … Read more

எஸ்பி.வேலுமணி மீதான வழக்கு: 2 நிறுவனங்களின் 110.80 கோடி வைப்பு நிதியை முடக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களின் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதியை முடக்கி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களை வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் … Read more

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழல் வழக்கு.. கூட்டாளிகளின் ரூ.110 கோடி முடக்கம்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகளின் ரூ. 110 கோடி மதிப்பிலான நிரந்தர வைப்புத்தொகை ரசீதுகளை (எஃப்.டி.ஆர்) இணைக்க, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேசிபி இன்ஃப்ரா லிமிடெட் மற்றும் ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் (பி) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்ததாகவும், வழக்கின் விசாரணையை முடிப்பதற்கு முன், வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் கலைக்கப்படுவதைத் தவிர்க்க, இந்தக் கணக்குகள் முடக்கப்பட … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் வரும் 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது. இந்த நிலையில், வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அன்றைய தினம் … Read more