சுரண்டை அருகே கண்டறியப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால உருளை கல்வெட்டு

சுரண்டை அருகே உள்ள நொச்சிகுளத்தில் கண்டறியப்பட்ட 800 ஆண்டு பழமையான உருளை வடிவ கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள நொஞ்சிகுளம் பகுதியைச் சேர்ந்த சின்ன வீரசின்னு என்பவரின் மகன் வீரமல்லையா. இவர், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பிஏ வரலாறு பயின்று வருகிறார். இந்நிலையில், அவரது ஊரில் திருமலையாண்டி என்பவரின் மகன் அப்பையாவின் இடத்தில் உருளை வடிவ கல்லில் எழுத்துகள் … Read more

சட்டமன்றம் முடக்கம்: ஸ்டாலின் கண்டனத்திற்கு மேற்கு வங்க ஆளுனர் விளக்கம்

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்திருந்த நிலையில், பதிலுக்கு ஜக்தீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அரசிலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ம் தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டார். இதனால், மேற்கு வங்க மாநில அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் … Read more

பேருந்து நிலையம் அருகிலேயே ஆட்டோ நிறுத்தம் அமைக்க வேண்டும்.. செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி..!

செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளகுறிச்சி மாவட்டம், கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் . ஆட்டோ டிரைவரான இவர் கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தனது ஆட்டோவை நிறுத்தியிருக்கிறார்.  இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி காவலர்கள் ஆட்டோவை நிறுத்த கூடாது என சொல்லியுள்ளனர். இதனால், காவலருக்கும் செந்தில்குமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த அவர் கடைவீதியில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் மீது ஏறி பேருந்து நிலையம் … Read more

கன்னட நடிகர் சிவராஜ்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு <!– கன்னட நடிகர் சிவராஜ்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ச… –>

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு தனது மனைவி கீதாவுடன் வந்திருந்த நடிகர் சிவராஜ்குமார் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மரியாதை நிமித்தமாக நடிகர் சிவராஜ்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தாக கூறப்படுகிறது. Source link

புதுச்சேரியின் 250 ஆண்டுகால ராஜ்நிவாஸில் சேதம்: வேறு இடம் மாறும் ஆளுநர் மாளிகை

புதுச்சேரி: 250 ஆண்டு பழமையான புதுச்சேரி ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு விரைவில் மாறும் ஆளுநர் மாளிகை மாற்றப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரியில் பிரெஞ்சு கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்ட 250 ஆண்டு பழமையான ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் கடும் சேதத்தினால் பொதுப்பணித்துறை பரிந்துரைப்படி பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு ஆளுநர் மாளிகை விரைவில் மாறவுள்ளது. புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கடற்கரையொட்டி ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. கடந்த 1733ம் ஆண்டு 1764ம் ஆண்டு வரை ஹோட்டலொன்று … Read more

சேலையில் பார்த்த கண்ணம்மா இல்லை… இது அடுத்த பரிணாமம்…! #Photo Gallery

Serial Actress Vinusha Devi Photo Gallery Update : சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக உருவெடுத்துள்ளவர் வினுஷா தேவி. டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். தனது நடிப்பு திறமைக்கு அங்கிகாரம் கிடைக்காத பலரும் தங்களது திறமையை இதில் வெளிகாட்டி வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் டிக்டாக் போன்ற பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு சமூகவலைதள பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனலில் தங்களை ப்ரமோட் … Read more

இரட்டிப்பு மகிழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்.! வாழ்த்துக்களை தெரிவிக்கும் சென்னை ரசிகர்கள்.!

15வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடருக்கான வீரர்களின் ஏலம், நேற்று பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தொடங்கியது. இன்று 2-வது நாளாக ஏலம் நடந்து கொண்டிருக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து, மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.  மேலும், இன்றைய 2-வது நாள் ஏலத்தில் இந்திய வீரர் ஷிவம் துபேவை 4 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. … Read more

ரூ.1 கோடி மதிப்புள்ள இரிடியம் எனக்கூறி செம்பு குடத்தை விற்க முயன்ற தம்பதி.. சிக்கிய பின்னணி..! <!– ரூ.1 கோடி மதிப்புள்ள இரிடியம் எனக்கூறி செம்பு குடத்தை விற… –>

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் எனக் கூறி செம்பு குடத்தை விலை பேசி விற்க முயன்ற தம்பதி போலீசில் சிக்கியுள்ளது. சிவசங்கர் – ஸ்ரீதேவி என்ற அந்த தம்பதி, தங்களிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருப்பதாக, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை நம்பிய பன்னீர்செல்வமும், செலவு இல்லாமல் இரிடியத்தை பெற நினைத்து, அந்த இரிடியத்தை திருட திட்டம் தீட்டி, மூன்று பேரை அழைத்துக் … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் : எடப்பாடி பழனிசாமி

சேலம்: ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் நடைபெறும் சூழலில் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “ ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். மீண்டும் … Read more