#Breaking : அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடாபகுதியில் ஏற்பட்ட வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக   கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான இதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் … Read more

அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன – எடப்பாடி பழனிசாமி <!– அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன – எட… –>

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் அருகே பனமரத்துப்பட்டியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கியதாகத் தெரிவித்தார். Source link

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 12-ம் தேதி தென்தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் … Read more

"கருணாநிதியின் அதே 'டெக்னிக்' எந்த மாற்றமும் இல்லை" – பாஜக அண்ணாமலை

சட்டசபை தேர்தலில் திமுக கொடுத்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது என கரூரில் பாஜக தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை குற்றம்சாட்டினார். கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வேலாயுதம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார் அப்போது. பொங்கல் தொகுப்பை உருப்படியாக கொடுக்க முடியாதது தமிழக அரசு. ஆனால், கடைகோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தியது மத்திய அரசு. தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகள் திமுகவினருடையது. … Read more

திருவள்ளூரில் சிட்கோ திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் தடை

திருவள்ளூரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு தொழிற்பேட்டை திட்டத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) வியாழக்கிழமை தடை விதித்தது. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ) தொழிற்பேட்டை அமைக்க திருத்தணி அருகே 145.98 ஏக்கர் நிலத்தை முடிவு செய்தது. இந்த திட்டமானது கடந்த செப்டம்பர் மாதம் 2021 பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், காவேரிராஜபுரம் கிராமத்தில் பொருத்தமான நிலத்தை ஒதுக்கிட திருவள்ளூர் ஆட்சியரின் உதவியை சிட்கோ நாடியது. அதனை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, … Read more

மொபைல் ஆப் மூலம் இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்.. சென்னை காவல்துறை கடுமையான எச்சரிக்கை.!

மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என்று சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  சமீபகாலமாக மொபைல் ஆப் மூலம் வட்டிக்கு கடன் கொடுத்து அதிக வட்டி வசூலிக்கும் கும்பல் பெருகி வருகிறது. கடந்த ஆண்டு இது போல ஒரு மோசடி கும்பல் கைது செய்யப்பட்டது. இது போன்ற செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய நிலையில் ப்ளே ஸ்டோர் மற்றும் சமூக வலைதளங்களில் அதுபோல கடன் கொடுக்கும் செயல்கள் அதிகரித்து … Read more

பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செய்த தம்பதி.. <!– பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செ… –>

கோவை மாவட்டம் வடவள்ளியில் பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுனரை கொலை செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். ஓணாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த  தனியார் டாக்சி ஓட்டுனர் சனு என்பவர் கடந்த 9ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி அமலோற்பவத்தை கைது செய்தனர். விசாரணையில் … Read more

4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை: பிளஸ் 2 திருப்புதல் தேர்வில் மாற்றமில்லை

தமிழகத்தில் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளஸ் 2 திருப்புதல் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் தவறாமல் பள்ளிகளுக்கு வர வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 12 … Read more

சென்னை: வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகை கொள்ளை

வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் தங்கநகை கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் திருச்சியில் இருந்து திரும்பிய அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது … Read more