ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு; அரசு ஊழியர் சங்கங்களுடன் 4 நாட்கள் கருத்துகேட்பு

சென்னை: தமிழக அரசில் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களிடம் 4 நாட்கள் கருத்துகளைக் கேட்க உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேநேரம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு ஜன1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2003- 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு முன்பிருந்த … Read more

அற்ப காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் போராடக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

மதுரை: அற்ப காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கோவில்பட்டியில் ஆகஸ்ட் 1-ல் வழக்கறிஞர் புருசோத்தமன் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் ராமகிருஷ்ணன் இடையே தகராறு நடைபெற்றது. சாலையில் வழிவிடாமல் சென்றது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் இருவருக்கும் தகராறு … Read more

ராகுல் காந்தி கைது: உடனே பொங்கிய விஜய்… சைலன்ட் மோடில் ஸ்டாலின்

TVK Vijay: ராகுல் காந்தி கைதுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த நான்கு பேரில் ஒருவராக திருச்சி டிஐஜி வருண்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ் மணி திவாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் (சென்னை) கூடுதல் காவல் இயக்குநராக … Read more

அடுத்த 2 நாட்களுக்கு.. இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

TN Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

“கவின் படுகொலையை விஜய் கண்டிக்கவில்லை” – திருமாவளவன்

பெரம்பலூர்: கவின் படுகொலையை தவெக தலைவர் விஜய் கண்டிக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. குறிப்பிட்டார். திருநெல்வேலி கவின் படுகொலையைக் கண்டித்தும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, திருமாவளவன் எம்.பி. பேசியது: “பட்டியலின மக்களுக்கு எதிரான இதுபோன்ற சாதிய படுகொலைகள் நிகழும்போது பெரிய அரசியல் கட்சிகளும், புதிய கட்சிகளும் மவுனமாக இருக்கின்றன. … Read more

தம்பி விஜய் வாயை திறந்துவிட்டாரா…? ராகுலுக்கு சப்போர்ட் – கிண்டலடித்த தமிழிசை

Tamilisai Soundararajan: தவெக தலைவர் விஜய் வாயை திறந்துவிட்டாரா?, அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? தற்போது யார் அவரை எழுப்பிவிட்டது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசி உள்ளார்.

“அதிமுக ஆட்சி அமைந்ததும் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம்!” – கிருஷ்ணகிரியில் இபிஎஸ் உறுதி

கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும், மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது 3-ம் கட்ட சுற்றுப்பயணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கியது. ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் திறந்த வாகனத்தில் பேசிய அவர் கூறியது: “மலர் விவசாயிகளுக்காக, ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் … Read more

தூய்மை பணியாளர் போராட்டம்: "தவெக துணை நிற்கும்.. சேகர்பாபு திமுகவுக்கு எதிராக செயல்படுகிறார்"!

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வெற்றிப் பெறுவதற்கு தமிழக வெற்றிக் கழகம் பக்கபலமாக துணை நிற்கும் எனவும் சட்டரீதியாக மட்டுமன்றி தேவையான அனைத்து உதவிகளுக்கு கட்சி துணைநிற்கும் என விஜய் கூறி உள்ளார். 

புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை முற்றுகையிட்ட மகளிர் காங்கிரஸார்!

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோ பாரில் அதன் ஊழியரால் சென்னை கல்லூரி மாணவர் குத்தி கொல்லப்பட்டார். மற்றொரு மாணவர் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், வழிபாட்டுதலங்கள் அருகே உள்ள ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்டோர் நேருவீதி-காந்தி … Read more