மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதா: ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே ஒப்புதல் தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில், எந்த திருத்தமுமின்றி, மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க, சரியான முடிவு. ஆனாலும், நீட் விலக்கு என்ற இலக்கை எட்ட … Read more