சென்னை, புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்த மழை!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் மாலையில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், நகரில் குளிர்ச்சி நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மே மாதத்திலேயே தொடங்கியது. கேரளா, கர்நாடக மாநிலங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் தீவிரமாக உள்ளது. பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் … Read more

பாதாள சாக்கடை மாதாந்திர கட்டணம் பல மடங்கு உயர்வு – நெல்லை மக்கள் அதிர்ச்சி

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை சேவைகளுக்கான மாதாந்திர கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1998 (தமிழ்நாடு சட்டம் 1999) பிரிவு 199 (1)-ன் துணைப் பிரிவின் கீழ் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டணங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநகரில் இதுவரை குடியிருப்பு இணைப்புகளுக்கு ஒருமித்த தொகையாக ரூ.40 ஆக இருந்த மாதாந்திர கட்டணம், தற்போது 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, … Read more

தமிழகத்தில் 6,500 ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்கள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

தூத்துக்குடி: தமிழகத்தில் 6,500 அங்கன்வாடி மையங்கள் ‘ஸ்மார்ட் அங்கன்வாடி’ மையங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவாக 100 மில்லி பால், 2 முட்டை, ஒரு கப் சுண்டல், 3 பிஸ்கட் ஆகியவை வழங்கப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவு வழங்குவதற்கான … Read more

நகைக் கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

சென்னை: “நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக” முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நான் மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய தொகைகளை, குறிப்பாக ரூ. 2 லட்சத்துக்கு கீழ், கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க … Read more

ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் புதிய விதிகளை தளர்த்த அறிவுறுத்தல்… எம்பி சு. வெங்கடேசன் முக்கிய தகவல்

Reserve Bank of India, Gold loan : நகைக்கடன் விதிமுறைகளை தளர்த்தக்கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். 

“மாநிலங்களவையில் தமிழகத்துக்கான என் குரல்…” – முதல்வரை சந்தித்த கமல் கூறியது என்ன?

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தற்போது தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது அவ்வளவுதான்” என்றார். மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று (மே 30) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மநீம கட்சிக்கு இடம் ஒதுக்கியதற்காக முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மநீம கட்சியின் … Read more

இந்த 6 மாவட்டங்களில் நாளை கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?

TN Rain Update: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்கான விருதுகள் – விண்ணப்பிக்க அரசு அழைப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி ஊக்குவித்து கவுரவிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக … Read more

பெரியாரே தனது சாதி பெயரில் தான் கையெழுத்து போடுவார்… மீண்டும் சர்ச்சையில் சீமான்?

Seeman Latest News Updates: பெரியார் பற்றி தம்பி விஜய் தெரியாமல் பேசுகிறார் என்றும் அவரே ராமசாமி நாயக்கர் என்று தான் தன்னை சொன்னார் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளார்.