சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல்
புதுடெல்லி: சர்வதேச அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா, ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் புதிய மற்றும் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, … Read more