புறப்பட்ட சில நிமிடங்களில் தீ பிடித்த விமானம்… பதைபதைக்கும் காட்சிகள்!

காத்மாண்டுவில் இருந்து துபாய் செல்லும் ஃப்ளை துபாய் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து காற்றில் பறந்த நிலையில், அது தற்போது அதிகம் கண்காணிக்கப்படும் விமானமாக மாறியுள்ளது.

பறவை மோதியதன் காரணமாக நடுவானில் எஞ்ஜினில் தீப்பிடித்த அமெரிக்க விமானம்

அமெரிக்காவில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் தீப்பிடித்தது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் கொலம்பஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நடுவானில் விமானத்தின் மீது பறவை மோதியதால், என்ஜின் பகுதியில் தீ பற்றியது. விமானம் உடனடியாக கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், அங்கு தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்ததாகவும் கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Source link

வங்கதேச அதிபராக ஷஹாபுதீன் பதவியேற்பு | Shahabuddin sworn in as President of Bangladesh

டாக்கா: வங்கதேசத்தின் 22வது அதிபராக, ஆளும் ஆவாமி லீக் கட்சியின் வேட்பாளரான முஹமது ஷஹாபுதீன், 73, நேற்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். நம் அண்டை நாடான வங்கதேசத்தின் அதிபராக, 2013ம் ஆண்டு முதல் இருந்த முகமது அப்துல் ஹமீதுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதிபர் பதவிக்கான ஆளும் ஆவாமி லீக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதியும், சுதந்திர போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சியான வங்கதேச … Read more

திருநெல்வேலியிலிருந்து ஜெருசலேத்திற்கு ஆன்மீக சுற்றுலாச் சென்ற 5 பேர் மாயம்..!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் ஜெருசலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 5 பேரை காணவில்லை என அங்குள்ள ஜெருசலம் நகர காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி, கள்ளிக்குளம், திசையன்விளை, உவரி, இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 47 பேர் நாகர்கோயிலில் உள்ள டிராவல் ஏஜென்சி மூலம் கள்ளிக்குளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி என்பவர் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடித்துவிட்டு ஊர்திரும்ப தயாரான போது உவரி பகுதியைச் சேர்ந்த ஜோயல், ரதி, … Read more

வங்கதேச புதிய அதிபராக முகம்மது ஷகாபுதீன் பதவியேற்பு| Mohammad Shakhuddin sworn in as the new president of Bangladesh

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா: வங்கதேச நாட்டின் புதிய அதிபராக முகம்மது ஷகாபுதீன்73 பதவியேற்றார். வங்க தேச அதிபராக இருந்த அப்துல் ஹமீத் பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரியில் துவங்கின. ஆளும் அவாமிக் லீக் கட்சி சார்பில் முகம்மது ஷகாபுதீன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று டாக்கா அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் வங்கதேச நாட்டின் 22-வது அதிபராக பதவியேற்றார். … Read more

வாந்தியால் கலைந்த உலக டூர் கனவு! கப்பல் பயணத்தில் பாதியில் இறக்கி விடப்பட்ட நபர்!

Cruise Ship for World Tour : கடல் மார்க்கமாக உலகம் டூர் போக நினைத்து லட்சக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில், அதனை மேற்கொள்ள முடியாமல் போனால், எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்ற வங்கத்து வெள்ளைப்புலி..!

சீனாவின் ஜெங்ஜோ நகர உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரியவகை வங்கத்து வெள்ளைப் புலி ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது. மரபணு பிறழ்ச்சியால் சில வங்கத்து புலிகள் ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தில் பிறக்கின்றன. அழிவின் விளிம்பில் உள்ளதால் வங்கப் புலி, பாதுகாக்கப்பட்ட விலங்கினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஒரு புலி, 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும். ஆனால், சீன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வெள்ளை நிற வங்கத்துப் புலி, 6 … Read more

நரை முடியைத் தடுக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்!

நியூயார்க்: மனிதனின் தலைமுடி எவ்வாறு நரைத்த முடியாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு நரை முடி ஏற்படுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிக்கு உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தலைமுடியை கருமையாகவே வைத்திருக்க உதவும் செல்கள் அவற்றின் முதிர்ச்சியடையும் திறனை இழக்கும்போது முடி நரைக்கத் தொடங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர். இதற்காக எலிகளில் விஞ்ஞானிகள் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். எலியை பரிசோதனைக்கு எடுத்த காரணமாக, மனிதர்களும், … Read more

சூடானில் சிக்கித்தவித்த 5 இந்தியர்கள் உட்பட 388 பேரை மீட்டது பிரான்ஸ்..!

சூடானில் சிக்கியிருந்த இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 11 நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெறும் மோதலால், பொதுமக்கள் சுமார் 400 பேர் பலியாகியுள்ளனர். அனைத்து நாடுகளும் தங்களது மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றியது. அதேபோல், நேற்று இரவு இந்தியர்கள் உட்பட 388 பேரை இரண்டு இராணுவ விமானங்கள் … Read more