Want normal and neighbourly relations, however… PM Modi on India-Pakistan ties | பாக்., உடன் சுமூக உறவையே இந்தியா விரும்புகிறது: பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: பாகிஸ்தானுடன் சுமூகமான மற்றும் அண்டை நாட்டுடனான நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். பாக்., விவகாரம் அந்த பேட்டியில் மோடி கூறியதாவது: அண்டை நாடான பாகிஸ்தானுடன் சுமூகமான மற்றும் அண்டை நாட்டுடனான நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிப்பதை நிறுத்தி விட்டு, பயங்கரவாதம் இல்லாத … Read more

காஷ்மீரில் G20 கூட்டம்… பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க பின்வாங்கும் சீனா – துருக்கி!

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க காஷ்மீரில் நடைபெறவுள்ள ஜி-20 சுற்றுலா தொடர்பான கூட்டத்தில் சீனாவும் துருக்கியும்  கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவை எடுத்துள்ளன. 

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஹிரோஷிமா சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா நகரை சென்றடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் சென்றடைந்த பிரதமரை, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி வரவேற்றனர். ஜப்பானை அடைந்ததும் பிரதமர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடேவின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதாகவும், உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை கூட்டாக எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் உலகத் தலைவர்களுடன் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.09 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 86 லட்சத்து 44 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

”ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் இறக்குமதிக்கு தடை…” – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்..!

ரஷ்ய வைரங்கள் இறக்குமதிக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள அவர், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் வெற்றி அவசியம் என்றும், G7 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.  Source link

காமெடி நிகழ்ச்சியில் சீன ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு – தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.16 கோடி அபராதம்

பீஜிங், சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சியை நடத்திய சியாகுவோ நிறுவனத்துக்கு சுமார் ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கிடையே … Read more

எலான் மஸ்கின் அடுத்த அதிரடி… டிவிட்டரில் 2 மணி நேர வீடியோ பதியும் வசதி… அதிர்ச்சியில் Netflix – Youtube!

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில் ட்விட்டர் பணியாளர்களை பெரிய அளவில் வேலையில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்தார்.

“வேண்டாம்… விட்டுவிடுங்கள்…” – ஜி7 தலைவர்களுக்கு ஹிரோஷிமா சர்வைவர்கள் எச்சரிக்கை

டோக்கியோ: “நல்ல வெளிச்சமான ஆரஞ்சு நிறம்… அந்த ஆண்டின் முதல் சூரிய உதயம்போல் அந்த சம்பவம் நடந்தேறியது…” என்று அந்தக் கொடிய தாக்குதலை நினைவுகூர்கிறார் ஜப்பானின் சடே. தற்போது 90 வயதாகும் சடே, இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசி ஏற்படுத்திய வரலாற்றின் மோசமான போர்த் தாக்குதலின் சாட்சியாக நம் முன் நிற்கிறார். அது குறித்து சடே தொடர்ந்து விவரிக்கும்போது, “நான், என் பாட்டி வீட்டில் இருந்தேன். அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது, நான் … Read more

ஜப்பானில் 'ஜி-7' உச்சி மாநாடு இன்று தொடக்கம் – பாதுகாப்பு வளையத்தின் கீழ் வந்த ஹிரோஷிமா நகரம்

ஹிரோஷிமா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று (19-ந் தேதி) தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாடு 21-ந் தேதி முடிகிறது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகிய 7 நாடுகளும் அழைப்பின்பேரில் கலந்து கொள்கின்றன. இந்த மாநாட்டில் … Read more