உக்ரைன் போரில் 500 குழந்தைகளை ரஷ்யா கொன்றது: ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீதான போரில் ரஷ்யா குறைந்தது 500 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 16 மாதங்கள் ஆகின்றன. குறைந்தது 500 உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா கொன்றது. ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் வெறுப்பு, ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது. பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைனின் மீது … Read more

சோமாலியாவில் தீவிரவாத தாக்குதல்: உகாண்டா பாதுகாப்புப் படையினர் 54 பேர் பலி

மொகதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த 54 பாதுகாப்புப் படையினர் பலியாகினர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,” சோமாலியாவில் பாதுகாப்புப் படையினருக்கும் – தீவிரவாதிகளுக்கும் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகதிசுவிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ள புலமாரரில் பாதுகாப்புப் படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் பலியாகினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. அல் ஷாபாப் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் … Read more

Army conspiracy to jail me: Imran Khan | என்னை சிறையில் அடைக்க ராணுவம் சதி: இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு … Read more

Gold for an Indian player | வட்டு எறிதலில் இந்திய வீரருக்கு தங்கம்

சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார். அதேபோல், 400 மீ.,ஓட்டப் போட்டியில் இந்தியாவின் ரசோனா மாலிக் தங்கம் வென்றார். சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார். அதேபோல், 400 புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

விண்வெளியில் அமெரிக்காவை முந்தும் சீனா… தயாராகும் சீன விண்வெளி நிலையம்!

சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை ‘Shenzhou-15’ ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர்.

ஒடிசா ரெயில் விபத்து – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்..!

வாஷிங்டன், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி … Read more

கொடுத்து வச்ச நாய்… ரூ. 16 லட்சத்தில் சொகுசு வீடு – என்னென்ன வசதியெல்லாம் இருக்கு பாருங்க!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது செல்ல நாய்க்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு நாய் வீட்டை கட்டியுளளார். இதன் மதிப்பு ரூ. 16.5 லட்சமாகும். 

இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தைக் கண்டு மனம் உடைந்தது: ஜோ பைடன்

வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தை கண்டு என் மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 2) பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் – பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ஆயுத கட்டுப்பாடு – அமெரிக்கா அழைப்பு

வாஷிங்டன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இடையே அமெரிக்கா-ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை அறிவிப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. இந்தநிலையில் புதியதாக பலதரப்பு ஆயுத கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட அமெரிக்கா தயாராக உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிக முயற்சிகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் … Read more