9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் பாக்., அமைச்சர்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்| Pak Minister To Visit India In May, First Since Nawaz Sharif In 2014

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கராச்சி: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ வரும் மே 4-ம் தேதி இந்தியா வருகிறார். 2014-ல் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது அவர் இந்தியா வந்தார். அதன்பின்னர் இந்தியா வரும் முதல் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் … Read more

கடுமையான பதிலடி கிடைக்கும்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்| Fierce retaliation!: Iran vows to take revenge on Israel

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெஹ்ரான் : ‘எங்களுக்கு எதிராக செயல்பட்டால் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்’ என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணுவ தினத்தையொட்டி, ஈரானில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பேசியதாவது: இஸ்ரேல் நம் நாட்டிற்கு எதிராக எடுக்கும் சிறிய நடவடிக்கைகளுக்குக் கூட கடுமையான பதிலடி கிடைக்கும். பிராந்தியத்தின் அமைதியை வழி நடத்தும் நட்பு நாடுகளுடன் எங்கள் படை நட்புடன் இருக்கும். மத்திய கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்கா … Read more

இந்தியா வருகிறார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ 

கராச்சி: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ வரும் மே 4-ஆம் தேதி இந்தியா வருகிறார். 2014-ல் நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்தபோது அவர் இந்தியா வந்தார். அதன்பின்னர் இந்தியா வரும் முதல் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலாவல் பூட்டோ இந்தியா வருகிறார். இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் … Read more

ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் தெரிந்தது சூரிய கிரகணம்: மக்கள் ஆர்வம்| Solar eclipse seen in Australia, Indonesia: Peoples interest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: இந்த ஆண்டின் முதல் அரிய வகை சூரிய கிரகணம், இன்று(ஏப்.,20) நிகழ்ந்தது. ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெளிவாக தெரிந்ததை அங்குள்ள மக்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர். இச்சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. சூரிய குடும்பத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. முழு கிரகணம், பகுதி கிரகணம், வளைய கிரகணம், வளைய மற்றும் முழு கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என நான்கு … Read more

AI சாட்ஜிபிடி தொடர்பான சர்வதேச விதிகளை உருவாக்க முயற்சிக்கும் ஜப்பான் உச்சிமாநாடு

ChatGPT In G7 Summit: சாட்ஜிபிடி, செயற்கை தொழில்நுட்பம் சர்வதேச விதிகள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஜி 7 நாடுகளின் மாநாட்டில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்

பிரபல கொரிய பாப் பாடகர் மூன்பின் மரணம் – தொடரும் இளம் ஸ்டார்களின் தற்கொலை

சியோல்: தென்கொரியாவின் பிரபல பாப் பாடகர் மூன்பின் உயிரிழந்தது அந்நாட்டு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென்கொரியாவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகர் மூன்பின். ஆரம்பத்தில் மாடல், நடிகராக இருந்த மூன்பின் பின்னர் தென்கொரியாவின் அஸ்ட்ரோ இசைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து சமீப ஆண்டுகளாக மூன்பின் ‘சன்ஹா’ இசைக் குழுவில் இருந்து வந்தார். 25 வயதான மூன்பின் தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மூன்பின்னின் மரணம் … Read more

சூடானில் இருந்து இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு | Indians suffering from not being able to leave Sudan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கார்துாம்: சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்த போதிலும் கார்துாம் நகரை விட்டு வெளியேற முடியாமல் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே சில நாட்களுக்கு முன் பயங்கர மோதல் வெடித்தது. இதில், இதுவரை 270க்கும் … Read more

ஏமனில் கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் பலி: உதவி பெறப்போன இடத்தில் பறிபோன உயிர்கள்

சனா: ஏமன் நாட்டில் கூட்டநெரிசலில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏமன் இஸ்லாமிய நாடு. இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் அதனையொட்டி தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயல கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 322 பேர் … Read more

சிறிய தீவில் உணவு, தண்ணீர் இன்றி 6 நாட்களாக பரிதவித்த 11 மீனவர்கள்..!!

கான்பெர்ரா, ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளை கடந்த வாரம் சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அப்போது அங்குள்ள புரூம் நகருக்கு அருகே கடலில் இந்தோனேசியாவின் 2 மீன்பிடி படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்தன. 2 படகுகளிலும் தலா 10 மீனவர்கள் இருந்தனர். அப்போது அதில் ஒரு படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது. அந்த படகில் இருந்த 10 மீனவர்களில் 9 பேர் மாயமாகினர். எஞ்சிய ஒரு மீனவரை மற்றொரு படகில் இருந்தவர்கள் மீட்டனர். அதை தொடர்ந்து 11 மீனவர்கள் இருந்த … Read more