மக்கள் தொகையில் இந்தியா இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும்: ஐ.நா

ஐக்கிய நாடுகள்: மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை நிலை – 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ”மக்கள் தொகையில் இந்தியா, இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும். இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் … Read more

"பகலில் போலீஸ்… இரவில் கிட்னாப்பர்ஸ்".. கடும் பஞ்சத்தால் தடம் மாறிய பாகிஸ்தான் போலீஸார்.. என்ன நடக்கிறது..?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது நடந்து வரும் சம்பவங்ள் பேரதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அந்நாட்டில் கடும் பஞ்சம் நிலவி வரும் நிலையில், பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் போலீஸார் சிலர் கடத்தல்காரர்களாக மாறி வருவது தற்போது தெரியவந்துள்ளது. என்ன நடக்கிறது பாகிஸ்தானில்.. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட பயங்கர மழை அந்நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. தொடர்ந்து பல மாதங்களாக பெய்த … Read more

ரிஷி சுனக் மனைவிக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பு

லண்டன்: இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று முன்தினம் 9.4% சரிந்தது. இது மூன்றாண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும். இதனால், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்‌ஷதா மூர்த்தி கடந்த திங்கள்கிழமை அன்று ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பைச் சந்தித்தார். அக்‌ஷதா மூர்த்திக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 0.94% பங்குகள் உள்ளன. நேற்று முன்தினம் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்த நிலையில் அக்‌ஷதா மூர்த்திக்கு ரூ.500 … Read more

அமெரிக்காவில் குருத்வாராக்கள் மீது தாக்குதல்: சீக்கியர்கள் 17 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி ஸ்டாக்டனில் உள்ள சீக்கிய குருத்வாராவிலும், கடந்த மார்ச் 23-ந் தேதி சாக்ரமென்டோவில் உள்ள குருத்வாராவிலும் தொடர் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவங்களால் அங்கு சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வடக்கு கலிபோர்னியாவின் 20 இடங்களில் போலீசார் … Read more

'ட்விட்டரை வாங்கியது தவறான முடிவு' – எலான் மஸ்க் கருத்து

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்க செய்தி நிறுவனமான ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொகுப்பாளர் டக்கர் கார்ல்ஸனுக்கு எலான் மஸ்க் சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது “ட்விட்டரை விலைக்கு வாங்கியது பலன் மிக்கதாக உள்ளதா” என்று கார்ல்ஸன் கேள்வி எழுப்பினார். அதற்கு எலான் மஸ்க் “இல்லை. அது நிர்வாக ரீதியாக தவறான முடிவு. ட்விட்டரின் விளம்பர வருவாய் குறைந்து வந்த சமயத்தில் நான் அதை பெரும் தொகை கொடுத்து வாங்கினேன். சமீபத்தில் ட்விட்டரின் மொத்த மதிப்பை மறுமதிப்பீடு செய்தோம். அதன் மதிப்பு 20 பில்லியன் … Read more

குருத்வாரா துப்பாக்கிச்சூடு 17 பேர் ஆயுதங்களுடன் கைது| Gurdwara shooting 17 people arrested with weapons

வாஷிங்டன், அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக, 17 பேரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர். கடந்த 2022 ஆக., 27ல், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டாக்டன் சீக்கிய கோவிலில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 5 பேர் உயிரிழந்தனர். இதே போல், கடந்த மார்ச் 23ல், சாக்ரமென்டோ சீக்கிய கோவிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. … Read more

அமெரிக்காவில் 8 பெண்களை பலாத்காரம் செய்தவருக்கு 156 ஆண்டுகள் சிறை..!!

வாஷிங்டன், அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்தவர் டாரெல் குட்லோ. இவர் மீது 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் கொள்ளை மற்றும் வளர்ப்பு நாயை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறு மொத்தம் 57 குற்ற வழக்குகள் இவர் மீது பதிவானது. இந்த வழக்குகள் இண்டியானா மாகாண கோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் டாரெல் குட்லோ … Read more

அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் ஏறும்போது காணாமல் போன மலையேற்ற வீராங்கனை உயிருடன் மீட்பு!

காத்மாண்டு: அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் ஏறும்போது காணாமல் போன மலையேற்ற வீராங்கனை உயிருடன் மீட்கப்பட்டார். இமய மலை அடிவாரத்தில் இருக்கும் நேபாள நாட்டில் ஏராளமான மலைப் பகுதிகள் உள்ளன. இங்குள்ள மலைப் பகுதிகளில் மலையேற்ற சாகச வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் மலையேறி செல்வதுண்டு. அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை பல்ஜீத் கவுர் நேபாளத்தில் அண்மையில் மலையேறிச் செல்லும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர், இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்ணா மலையை சென்றடைய திட்டமிட்டு இருந்தார். ஆனால் … Read more

சீனாவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் தீ விபத்து: 32 பேர் பலியான சோகம்

பீஜிங், சீனாவில் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகிய இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் 71 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஜின்ஹுவா நகரில் உள்ள தொழிற்சாலையில் திடீரென … Read more