பொம்மை கார் வாங்குவதற்காக தனது தம்பியுடன் பெரிய காரில் சென்ற 6 வயது சிறுவன், மின்கம்பத்தில் மோதி விபத்து..!

மலேசியாவில் பொம்மை கார் வாங்குவதற்காக தனது 3 வயது தம்பியுடன் வீட்டிலிருந்த பெரியவர்கள் பயன்படுத்தும் காரை 6 வயது சிறுவன் ஓட்டிச் சென்றுள்ளான். லங்காவி பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவர்கள் இருவரும் வீட்டில் தாய்-தந்தை அசந்திருந்த நேரத்தில் காரை எடுத்துக் கொண்டு சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. யாராவது மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் என நினைத்த சக ஓட்டுநர்கள், காருக்குள் எட்டிப்பார்த்த போது 2 … Read more

இத்தாலியின் மிலன் நகரில் ஆக்சிஜன் சிலிண்டர் லாரி வெடித்து பயங்கர விபத்து

மிலன்: இத்தாலியின் மிலன் நகரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அருகிலிருந்த ஏராளமான கார்கள் தீக்கிரையாகின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ வடக்கு இத்தாலியின் மிலன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள போர்டா ரோமானா பகுதியின் பையர் லோம்பார்டோ சாலையில் முதலில் ஒரு வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதனைத் தொடர்ந்து அருகே இருந்த வாகனங்களிலும் தீ பரவி பெரும் விபத்து ஏற்பட்டது. … Read more

டொனால்ட் டிரம்ப்: ‘குழந்தைகள் மீது சத்தியம்’.. அந்த பெண்ணை பலாத்காரம் செய்யல.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க பெண் எழுத்தாளர் என் மீது குற்றச்சாட்டுவது பொய்யானது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் டொனால் டிரம்ப் அதிபர் வேட்பாளாராக முன்னிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. … Read more

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு..!

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஒன்றின் விசாரணைக்காக 9ஆம் தேதியன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்த இம்ரான் கானை, நீதிமன்ற வளாகத்துக்குள் பாகிஸ்தான் துணை ராணுவப்படையினர் கைது செய்தனர். இதை கண்டிப்பதாகக் கூறி பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இம்ரான் கான் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். தான் நீதிமன்றத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்டதாகவும், கம்புகளால் தாக்கப்பட்டதாகவும் இம்ரான் … Read more

”இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது; உடனடியாக விடுதலை செய்திடுக” – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது என்றும், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு அமைப்புக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இம்ரான் கானை ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

இத்தாலியின் மிலன் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்து.. சாலையில் நிறுத்தப்பட்ட பல கார்கள் தீயில் எரிந்து சேதம்..!

இத்தாலியின் மிலன் நகரில் கார் நிறுத்தம் ஒன்றில் நேரிட்ட வெடிவிபத்தால் கார்கள் வரிசையாக தீப்பிடித்து எரிந்தன. மிலன் நகரின் மத்திய பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் எதிர்பாராதவிதமாக வெடித்தது. அதில் இருந்து பற்றிய தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் பரவி மளமளவென எரிந்தன. பற்றி எரிந்த கார்களில் இருந்து எழுந்த கரும்புகை பெரும் உயரத்திற்கு எழுந்தது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்காக காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். … Read more

பாறைகள் சரிந்து விழும் அபாயம்.. காலியாகும் அழகிய கிராமம்..

சுவிட்சர்லாந்தில் பாறைகள் சரிந்து விழும் அபாயத்தால் அழகிய மலை கிராமம் ஒன்றில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். அந்நாட்டில் ஆல்ப்ஸ் மலைத் தொடர் சாரலில் உள்ள ப்ரியன்ஸ் என்ற கிராமத்தில், பாறைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. மலையின் உச்சியில் இருந்து திரளான பாறைகள் அவ்வப்போது உருண்டு விழுவதால் வீடுகள் சேதமடைகின்றன. கால்நடைகள் கொல்லப்படுகின்றன. பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால் பனி மூட்டம் அடர்ந்த அந்த மலை கிராமத்தில் வசிக்கும் சுமார் 100 பேரை காலி … Read more

காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் வானிலேயே இடைமறித்து அழித்த இஸ்ரேல்..!

பாலஸ்தீன நகரமான காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் வானிலேயே இடைமறித்து அழித்தது. காசாவில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் இலக்குகளை இஸ்ரேல் தாக்கி வரும்நிலையில், பாலஸ்தீன போராளிகள் எல்லையில் தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவினர். காசாவில் இருந்து சரமாரியாக ராக்கெட்டுகள் ஏவப்பட்ட நிலையில், இஸ்ரேலின் அயர்ன் டோம் வான்வழி பாதுகாப்பு அமைப்பு ராக்கெட்டுகளை வானிலேயே இடைமறித்து அழித்தது. இதனிடையே பாலஸ்தீனத்தில் ராக்கெட் ஏவுதளங்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. Source link