காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – பாலஸ்தீன ஜிகாத் பிரிவின் தளபதி உட்பட 27 பேர் பலி

காசா: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீன ஜிகாத் பிரிவின் தளபதி உட்பட 27 பேர் பலியாகி இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும் இந்தத் தாக்குலில் பாலஸ்தீனம் ஜிகாத் அமைப்பை சேந்த தலைவர்கள் பலரும் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசாவின் தென் பகுதியில் உள்ள பாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் கட்டிடங்களில் இன்று காலை வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை காசா பகுதியில் 27 … Read more

ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம்..!

ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 4 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.15 மணியளவில் பூமிக்கு 40 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. Source link

நியுசிலாந்து ஏர்லைன்ஸில் எகானமி வகுப்பு பயணிகளுக்கு படுக்கை வசதி அறிமுகம்..!

நியுசிலாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் எகானமி வகுப்பு பயணிகளுக்காக sleeping pods எனப்படும் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட்டு அதன் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை போன்றவை பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விமானப் பயணத்திற்கும் நான்குமணி நேரம் மட்டும் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு நேர நீண்டப் பயணங்களை மேற்கொள்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன Source link

ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அந்நாட்டின் தேசிய பொறுப்புடமை அமைப்புக்கு (என்ஏபி) இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த இம்ரான் கானை ரேஞ்சர் படையினர் அதிரடியாக சுற்றி வளைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதையடுத்து, இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் … Read more

இஸ்ரேல் ராணுவம் மீண்டும் துப்பாக்கி சூடு: 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்ட காலம் நடந்து வரும் நிலையில் சமீப காலமாக அது தீவிரம் அடைந்து வருகிறது. அந்தவகையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதியான மேற்குகரை நகரத்தில் பாலஸ்தீன ஆயுத போராளிகள் பலர் பதுங்கி இருப்பதால் அவர்களை களையும் நடவடிக்கையாக கருதி ஒரு வருடமாக அங்கு இஸ்ரேல் ராணுவம் தீவிர சோதனை நடத்தி வருகிறது. இதனால் அடிக்கடி அங்கு மோதல் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காசா நகரத்தில் உள்ள ஹமாஸ் … Read more

சிறந்த புனைக்கதைக்காக 2023-ம் ஆண்டுக்கு பார்பரா, ஹெர்னானுக்கு புலிட்சர் விருது

நியூயார்க்: சிறந்த புனைக்கதைக்காக பார்பரா கிங்ஸ்லோவர் மற்றும் ஹெர்னான் டையஸ் ஆகியோருக்கு புலிட்சர் விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடகம், இலக்கியம், இசை போன்ற 21 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இது மிக உயரிய விருதாக மதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த விருதுகளை வழங்குகிறது. ஹங்கேரியைச் சேர்ந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவர் நிறுவியதுதான் புலிட்சர் விருது. கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு ஜோசப் புலிட்சர் வழங்கிய தொகையில் … Read more

“சீனாவின் உற்பத்தித் திறனை சார்ந்து இந்தியாவின் வளர்ச்சியை திட்டமிட முடியாது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

சீனாவின் உற்பத்தித் திறனை சார்ந்து இந்தியாவின் வளர்ச்சியை திட்டமிட முடியாது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உள்நாட்டின் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க சங்கிலித் தொடர் போல விற்பனையாளர்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அமிதாப் கண்ட் எழுதிய மேட் இன் இந்தியா புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஜெய்சங்கர்,உற்பத்தித் திறன் இல்லாமல் எந்த ஒரு நாடும் வளர்ச்சியை அடையாது என்று கூறினார். கோவிட் போன்ற பேரிடர் காலங்களில் ஏற்பட்ட சவால்களை சுட்டிக் காட்டிய ஜெய்சங்கர், உள்நாட்டு … Read more

ரஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ, ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்தன. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான எக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே … Read more

2020-ல் குறை பிரசவத்தில் 1.34 கோடி குழந்தைகள் பிறப்பு: ஐ.நா. சபை அறிக்கையில் தகவல்

கேப்டவுன்: கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாகவும். இதற்கு போர், பருவநிலை மாற்றம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அமைந்ததாகவும் ஐ.நா. சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் … Read more

அமெரிக்காவில் ரயில் தண்டவாளத்தில் சிக்கிய கார்.. நூலிழையில் உயிர்தப்பிய பதறவைக்கும் காட்சிகள்!

அமெரிக்காவில் ரயில் தண்டவாளத்தில் சிக்கிய காரிலிருந்து நொடிப் பொழுதில் மூன்று பேர் கீழே இறங்கி உயிர் தப்பும் காட்சிகள் வெளியாகி உள்ளன. டெக்சாஸ் மாகாணத்தின் ஃபோர்னே நகரில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது, தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, கார் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. ரயில் வருவதை அறிந்து உடனடியாக காரில் இருந்தவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. Source link