ரூ.1.31 கோடி சம்பளம்… ஆனால் வேலைக்கு போக யோசிக்கும் இளைஞர் – காரணம் என்ன?

World Bizarre News: 29 வயதான நபருக்கு சுமார் ரூ.1.31 கோடிக்கு வேலை கிடைக்கிறது, ஆனால் அந்த வேலைக்கு போகலாமா வேண்டாமா என யோசிக்கிறாராம். இதற்கு அவர் சொல்லும் காரணத்தை இங்கு காணலாம்.

ரஷிய-உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும்: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் கடந்த மாதத்தில் மட்டுமே 25 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். வெடிகுண்டுகள் போடப்பட்டதில் மக்களில் சிலரும் கூட பலியாகி உள்ளனர். இந்த படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். அதனை நான் பார்க்க விரும்புகிறேன். அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம் என கூறினார். இதுபோன்ற விசயங்களால் 3-ம் உலக போர் ஏற்பட்டு விடும். இதனையே நான் முன்பும் கூறினேன். … Read more

ரஷிய-உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தில் காலதாமதம்; விரக்தியில் டிரம்ப்

வாஷிங்டன் டி.சி., ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றுவதும், தாக்குவதும் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்பதும் தொடர்ந்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக … Read more

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹொன்சு தீவில் உள்ள குஜி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, … Read more

அபுதாபி சென்ற விமானம்: நடுவானில் பணியாளருக்கு திடீர் உடல் நலக்குறைவு – உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர்கள்

அபுதாபி, எத்தியோப்பியாவில் இருந்து அபுதாபிக்கு வரும்போது நடுவானில் விமான பணியாளருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த 2 தமிழக மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றினர். எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அப்பா நகரில் இருந்து அபுதாபிக்கு எதிகாத் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கோபிநாதன் மற்றும் சுதர்சன் பாலாஜி ஆகியோரும் இந்த விமானத்தில் … Read more

மொராக்கோ: அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து 22 பேர் பலி

ரபாத், ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரம் பெஸ். மிகப்பழமையான நகரான அங்கு 2 அடுக்குமாடி குடியிருப்புகள் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டன. இதில் சுமார் 20 குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த கட்டிடம் திடீரென இடிந்து தரைமட்டமானது. இதனையடுத்து அங்கு நடைபெற்ற மீட்பு பணியில் 22 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 16 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் அவர்களை தேடும் … Read more

பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இஸ்லாமாபாத், இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் சென்றார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா அதிபர் ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். இஸ்லாமாபாத் சென்ற அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருநாடுகளுக்கு இடையே ராணுவம், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பாக 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாகிஸ்தான் நாட்டின் மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் இந்தோனேசியா சென்று பட்டப்படிப்பு படிப்பது போன்றவை இதில் … Read more

இந்தியாவுக்கு 50% வரி… டிரம்ப் மனதை குளிரவைக்க மெக்ஸிகோ இதை செய்வது ஏன்?

Mexico 50% Tax On India: இந்தியாவின் மீது 50% இறக்குமதி வரியை மெக்ஸிகோ சுமத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை இங்கு காணலாம்.

சீனாவில் தீ விபத்து; 12 பேர் பலி

குவாங்சவ், சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டத்தின் சாந்தவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீ மளமளவென பரவியது. 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியது. இதில் சிக்கி 12 பேர் பலியானார்கள். 40 நிமிடங்களுக்கு பின்னர் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் … Read more

ஒரு போன் அழைப்பில் போரை நிறுத்துவேன் ; டொனால்டு டிரம்ப் பேச்சு

நியூயார்க், ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து இடையே 1907-ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இருப்பினும் எல்லையில் அமைந்துள்ள 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோவில் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறன்றன. இந்த மோதல், கடந்த ஜூலையில் முற்றியது. இருதரப்பு வீரர்கள் மோதிக்கொண்டதில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். 5 நாட்கள் நீடித்த இந்த போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார். அக்டோபரில் மலேசியா … Read more