பத்திரிகை மீது ஹசீனா காட்டம்| Haseena Kadam on the magazine

டாகா, ”நாட்டில் உணவுப் பற்றாக்குறை உள்ளதாக பொய் செய்தியை வெளியிட்டு, நம் நாட்டின் எதிரியாக செயல்படுகிறது,” என, பிரபல பத்திரிகைக்கு எதிராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆக்ரோஷமாக குறிப்பிட்டார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வெளியாகும், பிரபல வங்க மொழி பத்திரிகை, ‘புரோதம் அலோ’ சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. ஏழு வயது சிறுவன் ஒருவன், நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், அந்த நாட்டின் பார்லிமென்டில் … Read more

முடிசூட்டு விழாவின் போது மன்னர் சார்லஸ் இந்தியாவின் கோஹினூர் வைரத்தை அணிவாரா..!

முடிசூட்டு தேதி நிர்ணயிக்கப்பட்ட பிறகு எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே  பேசு பொருளாக இருந்த கோஹினூர் வைரத்தை கிங் சார்லஸ் III அல்லது ராணி மனைவி கமிலா அணிவார்களா என்பதுதான்.

சிறுவனுக்கு முத்தமிட்ட வீடியோ வைரல்: மன்னிப்புக் கோரிய தலாய் லாமா – பின்புலம் என்ன?

திபெத் புத்த மதகுரு தலைவர் தலாய் லாமா ஒரு சிறுவனிடம் முத்தம் கோரிய காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தலாய் லாமா சம்பந்தப்பட்ட சிறுவன், அவரது பெற்றோர் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் தலாய் லாமாவை ஒரு சிறுவன் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்த காட்சிகள் சர்ச்சையாகி உள்ளது. அந்த வீடியோவில் சிறுவன், தலாய் லாமாவை அரவணைக்கலாமா … Read more

கொரொனாவால் வந்த வினை.. 2 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி சம்பவம்.. இளம்பெண் ஆனந்த கண்ணீர்.!

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் கொரோனா வைரஸ் (Covid -19) தொற்றுநோய்க்குப் பிறகு உலகம் ஒரே மாதிரியாக இல்லை. இது உலகையே ஸ்தம்பிக்க வைத்தது மற்றும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையையும் மாற்றியது. வைரஸின் அறிகுறிகள் பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு சில வாரங்களில் மறைந்துவிடும், ஆனால் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு முழுமையாக குணமடைய பல ஆண்டுகள் ஆகலாம். இப்போது, … Read more

பணக்காரர்களின் நீச்சல் குளங்களால் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன், உலகம் முழுவதும் தண்ணீரால் மூன்றாம் உலக போர் ஏற்படும் என்று சில காலங்களுக்கு முன்பு வரை அறிஞர்கள் கூறி வந்தனர். எனினும், கோடை காலங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை ஆகியவையே. அதிலும், இந்தியாவின் பல பகுதிகளில் காலி குடங்களுடன் நீரை தேடி மக்கள் மணிக்கணக்காக அலையும் காட்சிகளும் கிடைக்க பெறுகின்றன. இவற்றில் தமிழகமும் தப்புவதில்லை. இந்த நிலையில், உலகம் முழுவதும் பணக்காரர்களின் பெரிய நீச்சல் குளங்கள், புல்வெளி தளங்கள் … Read more

பைபிளின் காணமல் போன பகுதியை கண்டறிந்த அல்ட்ரா வயலெட் கதிர்கள் செய்த மாயம்!

Bible – UV light study: நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த திருவிவிலியத்தின் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது…  நியூ டெஸ்டமென்ட் ஸ்டடீஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, இழந்த பகுதி, நற்செய்திகளின் பழமையான மொழிபெயர்ப்புகளில் ஒன்றாகும்

இந்தியாவைப் போல பாகிஸ்தானுக்கும் மலிவான ரஷ்ய கச்சா எண்ணெய் தேவை: இம்ரான் கான் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: இந்தியாவைப் போல் ரஷ்யா விலிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயை பாகிஸ்தானும் இறக்குமதி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ செய்தியின் மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது. இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கொண்டு வருகிறது. அதைப் போலவே, பாகிஸ்தானும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை மலிவு விலை யில் பெற விரும்பினோம். ஆனால் … Read more

சீன எல்லையில் கால் பதித்த அமித்ஷா.. கொந்தளித்த சீனா.. நடந்தது என்ன.?

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்திய – சீன எல்லைக்கு அமித்ஷா (Amit shah) சென்ற நிலையில், அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன எல்லையில் அமித்ஷா அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கிராமம் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதியான கிபித்தூவில், ‘அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டத்தை’ உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். அங்கு அவர் பேசும்போது, ‘‘2014 ஆம் ஆண்டுக்கு முன், … Read more

கண்பார்வை மங்கியது, நாக்கு உணர்ச்சியற்று போனது: புடினின் மருத்துவ அறிக்கை தகவல்| Blurred eyesight, numb tongue: Putins medical report reveals

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினின் கண்பார்வை மங்கியதாகவும், நாக்கு உணர்ச்சியற்று போனதாகவும் அவரது மருத்துவ அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு மே மாதம் ரஷ்ய அதிபர் புடினின்,69 உடல் நிலை குறித்து பல்வேறு விதமான யூகங்களை வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அவரது தோற்றத்தை வைத்தும் உடல்நிலை பாதிப்பு குறித்து செய்தி வெளியாகின. வயிற்று புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் பாதிப்பால் புடின் அவதியடைந்து வருவதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து … Read more

சீனாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு – தடுப்பு நடவடிக்கை தீவிரம்

பீஜிங், சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று வரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (எச்3என்8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர … Read more