பெண் கொண்டுவந்த பரிசுப்பொருளில் வெடிகுண்டு: போர் ஆதரவு சமூகவலைதள பிரபலம் உயிரிழப்பு

மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையே இன்று 405வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு ரஷியாவில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் ஜெயின் பீட்டர்ஸ்பர்க் நகர்ல் உள்ள உணவகத்தில் நேற்று குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் பிரபல சமூகவலைதள பதிவாளர் வெல்டலன் டட்டார்ஸ்கை உயிரிழந்தார். மேலும், 25 … Read more

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த ஸ்பைக் புரதம் காரணம்; ஆய்வில் தகவல்

வாஷிங்டன், கொரோனா பெருந்தொற்று 3 ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டி போட்டு வருகிறது. எனினும், இதற்கான தீர்வு இன்னும் காணப்படாத சூழல் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தொடக்கத்தில் திணறின. அதனால், ஊரடங்கு அமல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முக கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை கடைப்பிடித்தன. ஒருபுறம் கொரோனா வைரசை பற்றி அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மறுபுறம் … Read more

அமெரிக்காவில் நண்பரை அழைத்து வருவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர் பேருந்து மோதி பலி..!

அமெரிக்காவில் போசன் சர்வதேச விமான நிலையத்தில் நண்பரை அழைத்து வருவதற்காக காத்திருந்த இந்தியாவைச் சேர்ந்த தரவு ஆய்வாளர் பேருந்து மோதி உயிரிழந்தார். ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வசந்த் கோலா, அமெரிக்காவில் மருந்து நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த நிலையில், விமானத்தில் வந்த தனது நண்பரை அழைத்து வருவதற்காக மாசசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள போசன் விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். பி முனையத்தில் காரின் அருகில் நின்றுக் கொண்டிருந்த போது விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து மோதியதில் அதே இடத்தில் அவர் … Read more

நேட்டோ அமைப்பில் இணையும் ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து – அதிகரிக்கும் பதற்றம்

ஹெல்சின்கி, உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அது 3-ம் … Read more

ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம்! தாய்மொழியே சிறந்தது! இத்தாலி நாட்டு சட்டம்

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தின்படி, நாட்டின் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும், குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால், 1,00,000 யூரோ வரையிலான தொகை அபராதமக விதிக்கப்படும் என்று இத்தாலி அரசு கூறுகிறது. .    ChatGPTக்குப் பிறகு, முறையான தொடர்புக்கு ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய இத்தாலி முயல்கிறது.  இத்தாலியில் உள்ள குடிமக்கள் முறையான தகவல்தொடர்புக்காக ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்துவது விரைவில் தடை செய்யப்படும் … Read more

பிளேபாய் கவர்ச்சி இதழுக்கு போஸ் கொடுத்த பெண் மந்திரி

பாரீஸ் உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா(40) போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுப்பவர்கள் ஆடையில்லாமல் தான் கொடுப்பார்கள். ஆனால், மார்லின் ஷியாப்பா அப்படிச் செய்யாமல், டிசன்டாகவே போஸ் கொடுத்திருந்தார். இருப்பினும், மந்திரி ஒருவர் வயது வந்தோர் இதழுக்கு எப்படி போஸ் கொடுக்கலாம் என்று சர்ச்சை எழுந்து உள்ளது. பெண்கள், ஓரினச்சேர்க்கை உரிமைகள், கருக்கலைப்பு ஆகியவை குறித்து பிளேபாய் இதழுக்கு … Read more