பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் துப்பாக்கி தோட்டாக்களை வீசிய மர்ம நபரால் பரபரப்பு

லண்டன், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வாசல் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நேற்று மாலை நபர் ஒருவர் சுற்றி திரிந்து உள்ளார். அவரிடம் பை ஒன்றும் இருந்து உள்ளது. திடீரென அவர் பையில் இருந்த நிறைய பொருட்களை தூக்கி, அரண்மனைக்குள் வீசியுள்ளார். அவற்றில் துப்பாக்கி தோட்டாக்களையும் வீசி எறிந்து உள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை பெருநகர போலீசார் சுற்றி வளைத்து, கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்து உள்ளனர். வேறு ஏதேனும் ஆயுதங்களை … Read more

ரஷ்ய அதிபரைக் கொல்ல கிரெம்ளின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது உக்ரைன்: ரஷ்யா புகார்

Drones Attacks On Kremlin: உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் கிரெம்ளின் மீது தாக்குதல் நடத்தியதால், புடின் படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாக ரஷ்யா கூறுகிறது

3 மாதங்களாக உணவருந்தாத காதர் அட்னான் மரணம் – காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழி தாக்குதல்

டெல் அவிவ்: இஸ்ரேல் சிறையில் உணவருந்தாமல் போராட்டத்தை தொடர்ந்த பாலஸ்தீனத்தின் காதர் அட்னான் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீன கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் வெடித்தது. பாலஸ்தீனத்தை சேர்ந்த காதர் அட்னான் தனி நாடு கோரிக்கைக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தவர். இந்த நிலையில்தான் காதர் அட்னானை இஸ்ரேல் ராணுவம் கைது செய்தது. ஆனால், எந்தவித வழக்கு பின்னணியும் இல்லாமல் காதர் அட்னான் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனம் தரப்பில் குற்றச்சட்டப்பட்டது. சிறையில் இருந்த … Read more

"எனது ஆடையை தூக்கி".. ட்ரம்ப் செய்த சில்மிஷம்.. பெண் கூறிய பரபர புகார்.. ப்ளாஷ்பேக்கால் சிக்கல்!

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு இது போதாத காலம் போல இருக்கிறது. அவர் மீது வரிசையாக பெண்கள் வரிசையாக பாலியல் புகாரை அடுக்கி வருகின்றனர். அந்த வகையில், நேற்று 81 வயது மூதாட்டி ஒருவர் டிரம்ப் மீது பாலியல் புகார் அளித்திருக்கிறார். ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டி போட்ட போதே, டிரம்புக்கு எதிராக பல பெண்கள் பாலியல் … Read more

இலங்கையில் ரூ.3,200 கோடி முதலீடு செய்கிறது சீன அரசு| The Chinese government is investing Rs.3,200 crore in Sri Lanka

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில், 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு போக்குவரத்து முனையத்தை சீன அரசு உருவாக்க உள்ளது. அன்னிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த இலங்கை, அதில் இருந்து மீண்டு வர முயற்சித்து வருகிறது. இதற்காக பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த நேரத்தில், இலங்கையில் மிகப் பெரிய முதலீட்டை செய்ய உள்ளதாக … Read more

உலக வளர்ச்சியில் இந்தியா, சீனாவின் பங்கு 50% இருக்கும்: ஐஎம்எப் அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ‘பிராந்திய பொருளாதார கண்ணோட்டம்-ஆசியா மற்றும் பசிபிக்’ தொடர்பான ஐஎம்எப் அறிக்கை: 2022-ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 4.6% ஆக அதிகரிக்கும். இந்த வளர்ச்சி பெரும்பாலும், இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும். சர்வதேச வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு 70% ஆக இருக்கும். … Read more

ஹிந்து கடவுள் அவமதிப்புக்கு ஸாரி சொன்னது உக்ரைன்| Ukraine apologizes for insulting Hindu god

கீவ்: ஹிந்துக் கடவுள் மகா காளியை அவமதிக்கும் வகையில் உக்ரைன் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இதற்கு உக்ரைன் அரசு ‘ஸாரி’ தெரிவித்து உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நடக்கிறது. இந்நிலையில் உக்ரைன் ராணுவ அமைச்சகம் அதன் சமூக வலைதளத்தில் எண்ணெய் கிடங்கு பற்றி எரிந்து புகை மேலே எழும்பும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதற்கு அருகிலேயே அந்த படத்தை வைத்து மகா … Read more

“தலிபான்கள் உடனான சந்திப்பை தவிர்க்க மாட்டேன். ஆனால்…” – ஐ.நா. பொதுச் செயலாளர்

தோகா: “தலிபான்களைச் சந்திப்பதை நான் தவிர்க்க போவதில்லை. ஆனால், அதற்கு சரியான நேரம் தற்போது இல்லை” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்காக தோகாவில் ஆப்கானிஸ்தான் தூதர்கள் நடத்திய கூட்டத்தில் ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கலந்து கொண்டார். தலிபான்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என சர்வதேச சமூகத்திற்கு ஒரு பொதுவான புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் … Read more

அமானுஷ்யம்.. மனிதன் இறக்கும் போது மூளையில் தோன்றும் பயங்கர வெளிச்சம்.. மாயத்தோற்றம்.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி

நியூயார்க்: மனிதன் இறக்கும் தருவாயில் அவனது மூளையில் மிக பிரகாசமான வெளிச்சம் தோன்றுவதாகவும், அடுத்து சில மாயத்தோற்றங்களும், நெருக்கமனவர்களின் முகங்களும் கண் முன்னே பயாஸ்கோப்பில் பார்ப்பது போல வந்து செல்லும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் உலகில் ஜனனிக்கும் எந்தவொரு உயிரும் ஒருநாள் நிச்சயம் மரணித்துதான் ஆக வேண்டும். இதில் யாரும் விதிவிலக்கு அல்ல. இதுதான் இயற்கையின் விதி. இவ்வாறு ஒரு மனிதன் மரணம் அடையும் … Read more

ஜூனிலிருந்து கையில் பணம் இருக்காது: கதறும் அமெரிக்க நிதியமைச்சர்| US May Run Out Of Cash If Congress Fails To Raise Or Suspend Debt Ceiling: US Treasury Secretary

அமெரிக்க பார்லிமென்ட் கடன் உச்சவரம்பை உயர்த்தவோ அல்லது இடைநிறுத்தம் செய்யவோ அனுமதிக்கவில்லை எனில், வரும் ஜூன் 1க்குள், நாட்டின் செலவுகளுக்கே பணம் இருக்காது, வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என்று, அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நிதித் துறை எதிர்கொண்டிருக்கும் இந்த அபாயத்தைச் சுட்டிக்காட்டி, கடந்த திங்களன்று, அமெரிக்க பார்லி., உறுப்பினர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். சிக்கல் அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: அமெரிக்காவின் கடன்கள் முறையாக அடைக்கப்படும் என்ற முழு … Read more