ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஓவ்கடோக், மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ராணுவ வீரர்களை குறிவைத்தும், அப்பாவி பொதுமக்களை தாக்கியும் அங்கு கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனவே இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க ராணுவத்தினர் முகாமிட்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் தலைநகரான ஓவ்கடோக்கில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். இந்த ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே … Read more

நீங்கள் விந்தணு தானம் செய்தது போதும்… இனி வேண்டாம்… உத்தரவிட்ட நீதிமன்றம்!

ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட ஒரு வழக்கை விசாரித்த நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் விந்தணு தானம் செய்து வந்த அந்த நபருக்கு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 மாதங்களில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் ஆகும். தற்போது பக்முத் நகரை தொடர்ந்து உமன் நகரில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இங்கு குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் பலியாகி உள்ளனர். தாக்குதலில் இடிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்முத் நகரை போலவே … Read more

சுயநினைவை இழந்த பஸ் டிரைவர்; துணிச்சலாக செயல்பட்ட மாணவன்| The unconscious bus driver; Brave student

அமெரிக்காவில், பள்ளி ஒன்றின் பஸ் டிரைவர் உடல்நலக் குறைவால் மயங்கிய நிலையில், அதிலிருந்த ஏழாம் வகுப்பு மாணவன், துணிச்சலாக செயல்பட்டு, பஸ்சை நிறுத்தி சக மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் வகுப்புகள் முடிந்த பின், 60க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களது வீடுகளில் இறக்கி விட, பஸ் டிரைவர் கிளம்பினார். பஸ் சிறிது துாரம் சென்ற நிலையில், டிரைவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கினார். இதைப் பார்த்த, … Read more

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இது தொடர்பான வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய கோரி பிடிவாரண்ட் பிறப்பித்து லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த லாகூர் ஐகோர்ட்டு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை … Read more

அமெரிக்க – தென் கொரிய ஒப்பந்தம் ஆபத்தை உருவாக்கும்: கிம் சகோதரி எச்சரிக்கை

பியாங்யாங்: அமெரிக்கா – தென் கொரியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மோசமான ஆபத்தை உருவாக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்கா சமீபத்தில் ஒப்புக்கொண்டது .மேலும், வட கொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தலை தென் கொரியா எதிர்கொள்ள அந்நாட்டை அணு ஆயுத திட்டத்திலும் அமெரிக்கா ஈடுபடுத்தி வருகிறது. தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தம், இவ்வாரம் வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடன், தென் … Read more

மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்படும்… தொழில் நுட்ப ஆதாரங்களை மேற்கோள் காட்டி நிபுணர்கள் தகவல்

அமெரிக்க மென் பொருள் நிறுவனமான மைக்ரோ சாப்ட் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. ரஷ்யாவில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் கட்டமைப்புகள் தடையின் கீழ் இல்லாத தனியார் நிறுவனங்களின் மென் பொருள் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் சந்தையில் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும், மென்பொருள் திருட்டை குறைக்கவும் முயற்சிப்பதாக மென்பொருள் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Source link

படகு கவிழ்ந்து 11 பேர் பலி| 11 people died after the boat capsized

இந்தோனேஷியாவில் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர். இந்தோனேஷியாவின் ரியாவ் மாகாணத்தில் உள்ள டெம்பிலாஹன் துறைமுகத்தில் இருந்து நேற்று ஆறு பணியாளர்கள், 68 பயணியருடன் படகு ஒன்று தஞ்சுங் பினாங்கிற்கு சென்றது. ரம்ஜான் விடுமுறையை முடித்துவிட்டு குடும்பத்துடன் பலர் பயணித்தனர். படகு பலத்த காற்றில் சிக்கி கவிழ்ந்து கடலில் மூழ்கியது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் பெண்கள் குழந்தைகள் என 11 உடல்களை மீட்டனர்; 62 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். … Read more

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் களைகட்டிய பாரம்பரிய பலூன் திருவிழா..!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாரம்பரியமான பலூன் திருவிழா களைகட்டியது. ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜாவா தீவில் ஆண்டுதோறும் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மலைகளுக்கு நடுவே அமைந்துள வோனோசோபோ பகுதி மக்கள், தங்களது வீடுகளில் தயாரிக்கப்பட்ட வண்ண மயமான ராட்சத பலூன்களை பறக்கவிட்டனர். வானை அலங்கரித்த வண்ண பலூன்களை நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். Source link

இருளில் மூழ்கிய ஏர்போர்ட்… கும்மிருட்டில் மீட்புப் பணி… இந்திய விமானப்படை சூடானில் சாகசம்

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருளில் மூழ்கிக் கிடந்த ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கிய இந்திய விமானப்படை வீரர்கள், சினிமா பாணியில் 121 இந்தியர்களை மீட்டுள்ளனர். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 13 தவணைகளாக இதுவரை 2 ஆயிரத்து 400 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் … Read more