பாலியல் நடிகையுடன் ஜல்சா.. சரண்டராகும் டொனால்ட் டிரம்ப்.. ஆப்பு வைத்த நீதிபதி.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஆபாசபட நடிகைக்கு தேர்தல் நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளதால் அவர் அடுத்த வாரம் சரணடைய உள்ளார். ஸ்டோர்மி டேனியல்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆபாசபட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், இவரது இயற்பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட். இந்தநிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்டோர்மி டேனியல்ஸை கடந்த 2006ம் ஆண்டில் சந்தித்துள்ளார். ஸ்டோர்மி டேனியல்ஸின் கூற்றுப்படி, அவர் ஜூலை … Read more

போப் பிரான்சிஸ் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி

ரோம், போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை சீராகி வருகிறது என்றும், இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவார், என வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரும் வாரம் நடைபெறும் புனித வார நிகழ்வுகளில் போப் பங்கேற்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் … Read more

உலக வங்கித்தலைவராக அஜய் பங்கா, போட்டியின்றி தேர்வு ஆகிறார்

வாஷிங்டன், உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள அமெரிக்கர் டேவிட் மால்பாஸ், ஜூன் மாதம் 30-ந் தேதியில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. உலக வங்கியில் பெருமளவு பங்குகளை அமெரிக்காவே கொண்டிருப்பதால், அந்த நாட்டினர்தான் தலைவர் பதவிக்கு வர முடியும். இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியான அஜய் பங்கா (வயது 63) பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்தார். அவரை எதிர்த்து வேறு … Read more

பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் தீ; பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

மணிலா, பிலிப்பைன்சின் மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவு நோக்கி தனியாருக்கு சொந்தமான பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் கப்பல் ஊழியர்கள் 35 பேர் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு இந்த கப்பல் பசிலன் மாகாணத்தின் பலுக்-பாலுக் தீவு அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்தது. இந்த தீ கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் கப்பலில் இருந்த … Read more

“புச்சா நகர படுகொலைகளை மறக்க மாட்டோம்; ரஷ்யாவை மன்னிக்கவும் மாட்டோம்” – ஜெலன்ஸ்கி

கீவ்: “புச்சா நகரில் ரஷ்யா நிகழ்த்திய படுகொலைகளை ஒருபோதும் மறக்க முடியாது. அந்தப் படுகொலைகளுக்காக ரஷ்யாவை உக்ரைன் மன்னிக்கவே மன்னிக்காது” என்று அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்டோர் ரஷ்யப் படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள தேவாலயம் அருகே 45 அடி நீளத்துக்குச் சவக்குழி தோண்டப்பட்டு, உடல்கள் புதைக்கப்பட்டிருந்த காட்சி அமெரிக்காவைச் சேர்ந்த … Read more

இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்: வெள்ளை மாளிகை உயரதிகாரி

வாஷிங்டன்: இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என்று அமெரிக்க அதிபருக்கான துணை உதவியாளரும், இந்தோ – பசிபிக் ஒருங்கிணைப்பாளருமான கர்ட் கேம்பெல் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய – அமெரிக்க உறவு தொடர்பாக கூறியதாவது: ”இந்தியா மிகப் பெரிய சக்தி. அமெரிக்க அணியைச் சேர்ந்த நாடு அல்ல இந்தியா. அந்த நாடு ஒருபோதும் அமெரிக்க அணியில் இணையாது. இரு நாடுகளும் நெருக்கமான உறவில் இருக்க முடியாது என்பது இதற்கு அர்த்தமல்ல. ஒரு … Read more

நிருபர் கைது விவகாரம் : ரஷ்யாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு| Reporter arrest issue: Americans ordered to leave Russia

மாஸ்கோ: அமெரி்க்க நிருபர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்புமாறு அமெரிக்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் என்ற பத்திரிகை நிருபர் இவான் ஜெர்ஷ்கோவிச் , ரஷ்யாவில் இருந்தபோது அவரை அந்நாட்டு உளவுப்பிரிவினர் கைது செய்தனர். அமெரிக்காவிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்ட நிலையில் அவரை கைது செய்துள்ளது. நடந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது … Read more

மேற்கத்திய நாடுகள் 3-ம் உலகப் போரை தூண்டுகின்றன: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

மின்ஸ்க்: உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் அதிபர் லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைகாட்சியில் லுகாஸ்ஷென்கோ கூறும்போது, ”உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆதரவு என்பது அணு ஆயுதப் போரை தூண்டுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது. உக்ரைன் ஆதரவு நிலைப்பாடுதான் மூன்றாம் உலகப் போரைத் தூண்டுகிறது. ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளையும் நிபந்தனை இல்லாத பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார். இது குறித்து ரஷ்ய அரசின் … Read more

கட்டாய மதமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாக்.,கில் ஹிந்துக்கள் போராட்டம்| Members of Pakistan’s Hindu community protest forced conversions

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கராச்சி: பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும், அதற்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்கள், சிறுமிகள், திருமணமான பெண்கள் ஆகியோர் கடத்தி செல்லப்பட்டு, கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் … Read more

”400க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்ட புச்சா படுகொலையை உக்ரைன் என்றைக்கும் மறக்காது..” – அதிபர் ஜெலன்ஸ்கி..!

உக்ரைனில் 400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட புச்சா படுகொலையின் ஓராண்டு நினைவு தினத்தை அதிபர் ஜெலன்ஸ்கி நினைவுகூர்ந்துள்ளார். தலைநகர் கிவ்வில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புச்சா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை சண்டை நடைபெற்றது. ரஷ்ய துருப்புகள் வெளியேறிய பின்னர்தான் புச்சா நகரில் ஏராளமான பொதுமக்கள் கை, கால்கள் துண்டாடப்பட்டும், பின்னந்தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்டது தெரியவந்தது. … Read more