உலக செய்திகள்
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் குவிப்பு..!
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதின் எதிரொலியாக, டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கான இல்லம் ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. லண்டனிலுள்ள இந்திய தூதரக பாதுகாப்பு குறைபாடு விஷயத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மத்திய லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டு, லண்டன் பெருநகர போலீசார் … Read more
வெளிநாட்டு பரிசு பொருட்களை மறைத்த டொனால்டு டிரம்ப்| Donald Trump hid foreign gifts
வாஷிங்டன்:இந்தியப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கணக்கில் காட்டாதது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் குடியரசு கட்சியை டொனால்டு டிரம்ப், 2017 – 2021 வரை அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தார். இந்தக் காலத்தில், இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு, அரசு முறை பயணம் மேற்கொண்ட டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், … Read more
பிரிட்டன் துாதரகத்தில் நடவடிக்கை பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்| Action at the British Embassy to remove security barriers
புதுடில்லி, பிரிட்டனில் உள்ள இந்திய துாதரகத்தில், சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து நம் தேசியக் கொடியை அகற்றிய நிலையில், புதுடில்லியில் உள்ள அந்நாட்டு துாதரக வாசலில் இருந்த பாதுகாப்பு தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன. காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய துாதரகம் முன், அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, துாதரகத்தில் அத்துமீறி நுழைந்த அவர்கள், அங்கிருந்த நம் தேசியக் … Read more
கிம் ஜாங் உன் மகள் மீது வட கொரியர்கள் கோபம்| North Koreans are angry at Kim Jong Uns daughter
பியோங்யாங்:வட கொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் நிலையில், அதிபர் கிம் ஜாங் உன் மகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது, அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆசிய நாடான, வடகொரிய் அதிபராக பதவி வகிப்பவர் கிம் ஜாங் உன், 39. தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் எந்தவிதமான தகவலும் கசிந்து விடாதபடி ரகசியம் காத்து வருகிறார். மேலும், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி ஏவுகணை … Read more
பா.ஜ., உலகின் முக்கியமான அரசியல் கட்சி: அமெரிக்க பத்திரிகை பாராட்டு| Worlds Most Important Political Party BJP: US Press Appreciation
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‘உலகின் மிக முக்கியமான வெளிநாட்டு அரசியல் கட்சியாக பா.ஜ., விளங்குகிறது என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில், வால்டர் ருசல் மியட் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் சவால்களை எதிர்கொள்ள, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நம்பிக்கையை பெற்றவையாக உள்ளன. அமெரிக்கர்களின் … Read more
மவுனம் காக்கும் IMF… சிக்கலில் பாகிஸ்தான்!
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், 6.5 பில்லியன் டாலர் கடன் பெற மேலும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF ) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. திவால் நிலையைத் தவிர்க்க, பாகிஸ்தானுக்கு இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நிதி உதவிக்கு உறுதியளித்த நாடுகளிடம் இருந்து உறுதிமொழிகளைப் பெறுமாறு IMF பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகியவை பாகிஸ்தானுக்கு … Read more
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கைதானது போல் போலி புகைப்படங்கள்..!
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவர் கைதானதை போல் போலி புகைப்படங்கள் அந்நாட்டு சமூக வளைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. தன்னோடு நெருக்கமாக இருந்ததை பற்றி வாய் திறக்காமல் இருக்க பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு, டொனால்டு டிரம்ப் தேர்தல் நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தான் கைது செய்யப்பட்டால் தனக்காக போராடுமாறு ஆதரவாளர்களுக்கு … Read more
பாகிஸ்தானை குலுக்கிய நிலநடுக்கம்: 9 பேர் உயிரிழப்பு என தகவல்
இஸ்லமபாத், பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லமாபாத், ராவல் பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹட், லக்கி மார்வட் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உத்தர பிரதெசத்தில் இரவு ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி … Read more
போர்க்குற்றங்களை தடுக்க புதினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சீன அதிபருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
வாஷிங்டன், சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரஷியாவுக்கு சென்றார். அங்கு அவர் தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களிடையே மீண்டும் விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனில் நடந்து வரும் … Read more