பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி; பலர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6.5 ரிக்டர்: அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இருந்தது என்றும். பூமிக்கு அடியில் 116 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் ஹிண்டுகுஷ் மலைகளின் தெற்கு தென் கிழக்கு பகுதியை ஒட்டிய ஜுர்ம் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. … Read more

இந்தியா, பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குறைந்தது 11 பேர் பலி!

Latest updates on Pakistan-Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். இதுமட்டுமின்றி, இந்த நிலநடுக்கம் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இரு நாடுகளின் பல பகுதிகளில் நிலநடுக்கத்தால் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகரம் புதுடெல்லி வரை உணரப்பட்டது.  பூகம்பத்தின் மையம் … Read more

இலங்கைக்கு ரூ.24,600 கோடி கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல்

கொழும்பு: கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் (ரூ.24,600 கோடி) கடன் உதவி வழங்க சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை நான்கு ஆண்டுகால அடிப்படையில் வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக தற்போது 333 மில்லியன் டாலர் (ரூ.2,700 கோடி) நிதி வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்து வந்த நிலையில், சென்று ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி … Read more

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உக்ரைனுக்கு பயணம்..!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். புச்சா நகருக்கு சென்ற ஃபுமியோ, போரில் உயிரிழந்தவர்களுக் காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கிஷிடா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ஜெலன்ஸ்கியிடம், ஜப்பான் பிரதமர் … Read more

ரஷ்யாவில் புதின், ஜின்பிங் சந்திப்பு – மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டு சேர விருப்பம்

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புதினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டு சேர அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதனால் ரஷ்யா – சீனா வர்த்தக உறவுகள் அதிகரிக்கத் தொடங்கின. இது இரு நாடுகள் இடையே நெருக்கத்தை அதிகரித்துள்ளது. இந்திய பயணத்தை முடித்துக்கொண்ட ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உக்ரைனுக்கு திடீர் … Read more

பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் நிலநடுக்கத்திற்கு 9 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 1,000 கிலோமீட்டர் வரை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக, ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் பல கட்டங்களின் சுவர்களில் நீளமான வெடிப்புகள் ஏற்பட்டதோடு சில இடங்களில் … Read more

உலகின் மிக முக்கியமான கட்சி பாரதிய ஜனதா – அமெரிக்காவின் முன்னணி நாளிதழ் கருத்து

வாஷிங்டன்: உலகின் மிக முக்கியமான கட்சி பாஜக என்று அமெரிக்காவின் முன்னணி நாளிதழின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘வால் ஸ்டீரிட் ஜர்னல்’ நாளிதழ் செயல்படுகிறது. இந்தநாளிதழின் தலையங்க பகுதியில் கல்வியாளர் வால்டர் ரஸ்செல் மீட் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் தேசிய நலன்கள் குறித்த கண்ணோட்டத்தில், இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி உலகின் மிக முக்கியமான வெளிநாட்டு கட்சி ஆகும். 2024-ல் பாஜக ஆட்சி: இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டில் … Read more

மீண்டும் புயல் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா… முக்கிய நகரங்கள் தண்ணீரில் மிதப்பு -வாகனங்கள் மூழ்கின

ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் வீசிய புயலால் பெரும் வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வீசிய புயல் காற்றில் பல்வேறு இடங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ள நிலையில் தற்போது வீசிய புயல் காற்றால் கன மழை பெய்தது . இதனால் பல இடங்களில் சாலைகள் முழுமையாக நீரில் மூழ்கி கிடக்கின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. புயலின் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களில் முதல் கட்டமாக … Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார். போரில் திருப்புமுனையாக கருதப்படும் மோஷ்சுனில் குழுமியிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனிய வீரர்களைப் பாராட்டினார். புதிதாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகளையும் அவர் வழங்கினார். Source link

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ரூ.24,000 கோடி கடனுதவி| 24,000 crore loan to Sri Lanka to overcome the economic crisis

கொழும்பு கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, அதன் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான ஒப்புதலை, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் வழங்கி உள்ளது. போராட்டம் நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டியது. இதனால் அந்நாட்டு மக்கள் அவதி அடைந்தனர். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே குடும்ப ஆட்சி தான் காரணம் எனக் கூறி பொது … Read more