ஈக்வடாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலில் இடிந்து விழுந்த அருங்காட்சியகம்.!

ஈக்வடாரில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள அருங்காட்சியகம் கடலில் இடிந்து விழுந்தது. எல் ஓரோ மாகாணத்தின் கடலோரப் பகுதியில் புவேர்ட்டோ பொலிவர் மரைன் மியூசியம் செயல்பட்டு வந்தது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இதில், குறைந்தது 5,000 கடல் கலைப்பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால், அருங்காட்சியகம் இடிந்து கிட்டத்தட்ட முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. மூழ்கிய அருங்காட்சியகத்தில் இருந்து கலைப்பொருட்களை உள்ளூர் மக்கள் படகுகளில் மீட்டு வருகின்றனர்.   Source link

கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பியாங்யாங், அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 13-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு அதிரடி காட்டும் வகையில் கடந்த வாரம் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா, குறுகிய தொலைவு சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16-ந்தேதி தென்கொரியா-ஜப்பான் இடையிலான உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இதற்காக தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-இயோல், ஜப்பானுக்கு பயணம் செய்து அந்நாட்டின் பிரதமர் … Read more

உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ராணுவ தளபதியுடன் ரஷ்ய அதிபர் சந்திப்பு!

உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவின் உயர்மட்ட ராணுவத் தளபதியை, ரஷ்ய அதிபர் புடின் நேரில் சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள ஒட்டுமொத்த ரஷ்யப் படைகளின் தளபதியான வலேரி ஜெராசிமோவையும் துணை தளபதி செர்ஜி சுரோவிகினையும் புடின் சந்தித்த வீடியோவை கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. Source … Read more

உலகையே பாதுகாக்க முயற்சித்த நோபல் வெற்றியாளர்… யார் இந்த மரியோ மேலினா?

Google Doodle Mario Molina: புகழ்பெற்ற மெக்சிகன் வேதியியலாளர் டாக்டர் மரியோ மோலினாவின் 80ஆவது பிறந்தநாள் இன்று (மார்ச் 19) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கூகுள் வண்ணமயமான டூடுலுடன் கொண்டாடியது. 1995ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற மோலினா, பூமியின் ஓசோன் படலத்தைக் காப்பாற்ற ஒன்றிணைவதற்கு அரசாங்கங்களை வெற்றிகரமாக நம்பவைத்த பெருமைக்குரியவர். மனிதர்கள், தாவரங்கள் மற்றும் வனவிலங்குகள் என அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பதற்கு இன்றியமையாத பூமியின் ஓசோன் கவசத்தை … Read more

தென்கொரியாவில் அமெரிக்க வீரர்கள் வான்வழி தாக்குதல் பயிற்சி.!

தென்கொரியாவில் நடைபெற்றுவரும் சுதந்திர கேடயம் 23 கூட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க வீரர்கள் வான்வழி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டனர். தலைநகர் சியோலுக்கு வடக்கே போச்சியோனில், வடகொரியா எல்லையில் இருந்து 30 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இப்பயிற்சி நடைபெற்றது. இதில் ராணுவ ஹெலிகாப்டர்கள் M777 ஹோவிட்ஸரை கொண்டு சென்றன. மேலும் இன்று அமெரிக்கா-தென்கொரியா விமானப்படைகள் B-1B குண்டுவீச்சு விமானங்கள் தலைமையில் ஒருங்கிணைந்த விமானப் பயிற்சியை மேற்கொண்டன. பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், வடகொரியா இன்று கொரிய தீபகற்பத்தின் … Read more

போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தார் ரஷ்ய அதிபர்: பின்னணி என்ன?| Russian president enters Ukraine amid war: Whats the background?

கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனின் மரியுபோல் நகரில் இன்று(மார்ச் 19) ஆய்வு மேற்கொண்டார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஓராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார … Read more

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாக்., விமான போக்குவரத்து துறை| Pakistans aviation sector is reeling under financial crisis

கராச்சி,-பாகிஸ்தானில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு கடன் தொகை அதிகமாகி விட்டதாலும், பாகிஸ்தான் உள்ளூர் கரன்சியின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், அங்கு கடும் நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. இந்நிலையில், இந்த நெருக்கடி தற்போது பாகிஸ்தான் விமான போக்குவரத்து … Read more

ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 14 பேர் பலி

குயிடோ:தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,” ஈக்வடாரில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 66.4 கிமீ. நில நடுக்கத்தினால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மருத்துவமனைகள், கல்வி கூடங்கள் என பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிட்புப் பணிகள் தொடர்ந்து … Read more

கை விரித்த உற்ற நண்பனான சவுதி அரேபியா… அதிர்ச்சியில் பாகிஸ்தான்…!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு கடன் தேவைப்படும்போதோ, நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சவுதி அரேபியாதான் முதலில் உதவும் நாடாக இருந்தது. ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை என்று தெரிகிறது. பாகிஸ்தானுக்கு வட்டியில்லா கடனை வழங்க சவுதி அரேபியா மறுத்துவிட்டது. இஸ்லாமிய நண்பரின் இந்த முடிவால் இஸ்லாமாபாத் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட பாகிஸ்தானுக்கு உதவ நட்பு நாடுகள் கூட தயாராக இல்லை என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். திவால் நிலையை … Read more