உலக செய்திகள்
MQ-9 Reaper உளவு டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சி..!
கருங்கடலில் MQ-9 Reaper உளவு டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரால் பதற்றம் நிலவும் நிலையில், கருங்கடலில் பறந்த அந்த டிரோனை, ரஷ்யாவின் 2 போர் விமானங்கள் இடைமறித்ததாகவும், அப்போது டிரோன் மீது எரிபொருளை கொட்டியும், மோதியும் கீழே விழச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதை மறுத்த அமெரிக்கா, ரஷ்ய விமானம் மோதியதால் சேதமடைந்த டிரோனை தாங்களே கருங்கடலில் விழச் செய்ததாக விளக்கம் அளித்தது. இந்நிலையில் டிரோனில் பொருத்தப்பட்டிருக்கும் … Read more
அமெரிக்காவைத் தொடர்ந்து TikTok செயலி மீது தடை விதித்த பிரிட்டன்!
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க, மேலே குறிப்பிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசு தொலைபேசிகளில் டிக்டோக்கை தடை செய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. “அரசின் முக்கியத் தகவல்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கே முன்னுரிமை, எனவே இன்று நாங்கள் … Read more
உக்ரைனில் காயமடைந்த வீரர்களை வெளியேற்ற நடமாடும் மருத்துவமனை பேருந்து..!
உக்ரைனில் போரில் காயமடைந்துள்ள வீரர்களுக்காக நடமாடும் மருத்துவமனை பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 6 படுக்கை வசதிகள் மற்றும் 6 மருத்துவர்களுடன் உள்ள இந்த பேருந்து, காயமடைந்த வீரர்களை போர் பகுதியில் இருந்து வெளியேற்றி வருகிறது. அவ்ஸ்ட்ரிக்கா பஸ் (Avstriika Bus) என பெயரிடப்பட்டுள்ள இந்த பேருந்தை உருவாக்க 6 மாத காலம் ஆனதாகவும், கடந்த ஒன்றதை மாதமாக இயக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேருந்து பழுதடைந்ததால் அதற்கு மாற்றாக மற்றொரு பேருந்தும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் புதிய … Read more
கொரியப் பெண்கள் மீது வெறி.. 47 பலான வீடியோக்கள்.. ஆஸ்திரேலிய பாஜக பிரமுகர் லீலை.!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய சமூகத்தின் முக்கிய நபராக கருதப்படுபவர் பாலேஷ் தங்கர் ஆவார். இவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். இந்தநிலையில் இவர் மீது 13 பாலியல் பலாத்கார வழக்குகள், போதை வஸ்துக்களை பயன்படுத்தியது, பலாத்காரத்தை வீடியோ பதிவு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பாலேஷ் தங்கர் மீது ஆஸ்திரேலியாவில் 13 பாலியல் பலாத்கார வழக்குகள் விசாரணையில் உள்ளது மற்றும் சிட்னியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் உயர்தர ஹோட்டலில் பலாத்கார செயலை படம் பிடித்தார் என … Read more
டிக்டாக் செயலிக்கு பிரிட்டன் தடை| UK bans TikTok app
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: சீன நிறுவனத்தின் டிக்டாக், செல்போன் செயலிக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒருநிறுவனம் டிக்டாக் செயலியை உருவாக்கியுள்ளது. இச்செயலிக்கு ஏற்கனவே அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் , அரசின் இணையதள சாதனங்களில் உள்ள முக்கிய தரவுகள் டிக்டாக் செயலியால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே டிக்டாக்கிற்கு தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன்: சீன நிறுவனத்தின் டிக்டாக், செல்போன் செயலிக்கு பிரிட்டனில் … Read more
எம்.பி. ஆன பிறகு, ஒரு முறை கூட நாடாளுமன்றம் வராத யூடியூபர்..!
ஜப்பானில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஒருமுறை கூட நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்காத பிரபல யூடியூபரின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. பிரபலங்கள் குறித்து கிசுகிசுக்களை டுவீட் செய்வதன் மூலம் பிரபலமான யோஷிகாசு (Yoshikazu ), கடந்தாண்டு மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துபாயில் வசித்துவந்த யோஷிகாசு ( Yoshikazu ), ஒரு முறை கூட நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்காமல் ஒரு கோடியே 16 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இது குறித்து விசாரிக்க அழைத்தபோது, துருக்கியில் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு … Read more
"எதிர்காலத்தில் அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" – ரஷியா
மாஸ்கோ, கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்தது. ரஷியா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த பகுதியில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததால் கோபமடைந்த ரஷியா அதனை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சர்வதேச ஒப்பந்தத்தை ரஷியா மீறி உள்ளதாக அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவிடம் அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்தது. அதே சமயம், சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் … Read more
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.1 ஆக பதிவு
வெலிங்டன், நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. 300 கிமீ சுற்றளவு கொண்ட மக்கள் … Read more
உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து..!
இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியதாகவும், சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link