இங்கிலாந்து மக்கள் ஆனந்த கண்ணீர்; அப்படி என்ன செய்தான் திருடன்.?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு திருடன் தனது குற்றச் செயலில் மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருந்ததால், அவர் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தந்தது மட்டுமல்லாமல், மன்னிப்புக் கடிதத்தையும் திருடப்பட்ட பொருட்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் விட்டுச் சென்றது பேசுபொருளாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள கனாக்கில் உள்ள ஹியூஸ் இறுதி ஊர்வல சவப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் முகமூடி அணிந்த திருடன் அங்கிருந்த “சொர்க்கத்திற்கான போஸ்ட்பாக்ஸ்” என்று அழைக்கப்படும் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட … Read more

அடக்குமுறையின் நவீன வடிவம்.. 10 லட்சம் திபெத் குழந்தைகள் டார்கெட்.. சீனா அடாவடி.!

சீனா மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை கடந்த 1950 ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டதிபெத்தியர்களை சீன ராணுவம் படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோ சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவுத்த மடாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சொந்த மொழி, மதத்தைப் பின்பற்ற முடியாமல் அகதிகளைப் போன்று திபெத் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் வேவு பார்க்கப்பட்டு, இன்றுவரை வேட்டையாடப்பட்டு வருகின்றனர். சீனாவிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் … Read more

குழாயை அழகாக திறந்து விட்டு, குட்டி குளியல் போட்ட கிளி; வைரலான வீடியோ

டொரண்டோ, கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, மனிதர்கள், குரங்குகள் உள்ளிட்ட பாலூட்டி வகைகளுடன் ஒத்து போகிற அளவுக்கு கிளிகள் அறிவாற்றல் கொண்டவை என தெரிய வந்து உள்ளது. அவை கணக்குகளை தீர்க்கும் திறன்கள், தங்களது விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆற்றல், எண்ணிக்கை, கூட்டல் மற்றும் கழித்தல் ஆகியவற்றுடன் பூஜ்யம் பற்றிய விசயங்களையும் கூட புரிந்து கொள்ளும் திறன் படைத்தவை என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவை பல்வேறு பாஷைகளை கற்கும் திறனுடன், மனிதர்களுடன் … Read more

கூகுளில் என்னை பற்றிய தேடுற…. அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த வடகொரிய அதிபர்…!

சியோல், வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அவரது தந்தை கிம் ஜோங்–2 மறைவுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டில் புதிய அதிபராக பொறுப்பு ஏற்றார் கிம் ஜாங் உன். அவரின் தந்தை போன்றே இவரும் கம்யூனிச அரசை நிர்வகித்து வருகிறார். அதனால் தன்னை எதிர்ப்பவர்களையும், அரசுக்கு எதிராக சதி செய்பவர்களையும் தண்டிக்கும் வகையில் மரணத் தண்டனை விதித்து வருகிறார். கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் … Read more

2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா..

2 குறுகிய பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா மீண்டும் பரிசோதித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான போர் பயிற்சியை தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக நடத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், அந்த 2 நாடுகளின் பரம எதிரியாக கூறப்படும் வடகொரியா நேற்று 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. 2 ஏவுகணைகள் பரிசோதனை நடத்தப்பட்டது தொடர்பான 5 புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகம் இன்று பகிர்ந்துள்ளது. அவசியம் ஏற்பட்டால் எதிரிகளை தாக்கி அழிக்கும் வகையில் நடத்தப்பட்ட பயிற்சியே … Read more

ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் சோகம்; 190 பேர் பலி, 584 பேர் காயம்

மலாவி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றி மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும். இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவுக்கு … Read more

என்னைக் கடத்தி படுகொலை செய்வதே பாக். போலீஸின் நோக்கம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு

லாகூர்: “என்னைக் கடத்தி படுகொலை செய்வதே பாகிஸ்தான் போலீஸின் நோக்கம்” என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்ந்ததாக பாகிஸ்தான் அரசு குற்றம் சுமத்தியது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை இம்ரான் கான் திட்டவட்டமாக மறுத்தார். இந்த நிலையில், வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு … Read more

3-ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும் – டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், உக்ரைன் – ரஷியா இடையே போர் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் லொவா நகரில் நடந்த … Read more

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரிய ராணுவத்தினருடன் அமெரிக்கா கூட்டு போர் பயிற்சி

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி,  தென்கொரிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டு போர் ஒத்திகை நடத்தியுள்ளது. சியோல் அருகே உள்ள யோன்சியோன் பகுதியில் இருக்கும் ஆற்றை கடந்து படையணிகளை கொண்டு செல்வது, இதற்காக தற்காலிக பாலம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து இருநாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் அமெரிக்கா, தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த 400 வீரர்கள் கலந்து கொண்டதுடன், 2 அபாச்சி ஹெலிகாப்டர்கள், 50 ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன.   Source link

வளர்ப்பு நாயால் வந்தது பிரச்சினை.. சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்..

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் வளர்ப்பு நாய் லண்டன் பார்க்கில் சங்கிலி இல்லாமல் சுதந்திரமாக சுற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுஇடங்களில் சங்கிலியுடன் வளர்ப்பு நாயை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சட்டம் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அந்நாட்டு பிரதமராக உள்ள இந்திய வம்சாவழியான ரிஷி சுனக் குடும்பத்தினருடன் லண்டன், ஹைதி பூங்காவில் (Hyde Park) நடைப்பயிற்சி சென்ற கொண்டிருந்தபோது அவரது வளர்ப்பு நாயான நோவா சங்கிலி இல்லாமல் சுற்றிய வீடியோ … Read more