உலக செய்திகள்
ஆப்ரிக்க நாடான காங்கோவில், கிராமத்திற்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழப்பு..!
ஆப்ரிக்க நாடான காங்கோவில், கிராமம் ஒன்றுக்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். கிரிண்டரா என்ற கிராமத்திற்கு நள்ளிரவு ஒரு மணியளவில் வந்த போராளி குழுவினர், வழியில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். அங்கிருந்த கடைகளை சூறையாடியதுடன், மருத்துவமனை ஒன்றையும் தீயிட்டு கொளுத்திவிட்டு சென்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஏ.டி.எப். போராளி குழு இந்த வெறிச்செயலை அரங்கேற்றி உள்ளனர். கடந்த வாரம், அதே பகுதியில் உள்ள மற்றொரு கிராமத்தில் … Read more
நேபாள நாட்டின் அதிபராக ராம் சந்திரா பவுடல் பதவியேற்பு
நேபாள நாட்டின் அதிபராக ராம் சந்திரா பவுடல் பதவியேற்றார். காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தற்காலிக தலைமை நீதிபதி ஹரி கிருஷ்ண கார்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 5 முறை அமைச்சராகவும், ஒரு முறை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். Source link
அதிகரிக்கும் நெருக்கடி… குறைந்தபட்ச கடனாவது தாங்க… கையேந்தும் பாகிஸ்தான்!
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு தற்போது அமெரிக்கா நினைவுக்கு வந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர் நிலை ஒப்பந்தத்தில் தாமதம் அரசாங்கத்தை பதற்றம் அடைய செய்துள்ளது. இந்நிலையில், முடங்கிய கடன் திட்டத்தை பெற, அமெரிக்காவின் உதவியை நாட முடிவு செய்துள்ளார். நிதி அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அமைப்பின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக நம்புவதால், அமெரிக்காவின் உதவியை நாட அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலதாமதத்தால் கலக்கம் அடைந்துள்ள அரசு ஊழியர்கள் நிலை … Read more
ஜி20 மாநாடு : ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை?| G20 Conference: Russian President Putin visit India?
மாஸ்கோ: ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை குறித்து அதிபர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி – 20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு, அடுத்தாண்டு செப்., 9 மற்றும் 10 ல் புதுடில்லியில் நடக்க உள்ளது. இதில், உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா பங்கேற்கிறது. இதையடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் … Read more
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைதுவாரண்ட்டை இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் பெண் நீதிபதி மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த வழக்கில் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இம்மாதம் 29-ம் தேதிக்குள் இம்ரான் கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவரை கைது செய்ய ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் போலீசார் லாகூர் சென்றுள்ளதாக … Read more
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்; 24 மணி நேரத்தில் டைவர்ஸ்.!
தன்னை தானே நேசிப்பதன் அடுத்தக்கட்டமாக தன்னைத் தானே திருமணம் செய்யும் வழக்கும் வெளிநாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டும் பிரேசிலியன் மாடல் அழகியான கிரிஸ் கேலரா தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டார். அதேபோல் அதே ஆண்டில் பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளம் வழக்கம் இந்தியாவில் இல்லாதிருந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அதுவும் நடந்தது. குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் … Read more
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2-1 என தொடரை கைப்பற்றியது இந்தியா..!
அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2-க்கு 1 என்ற கணக்கில், பார்டர் – கவாஸ்கர் தொடரை இந்திய அணி வென்றது. போட்டியின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியா 480 ரன்களும், இந்தியா 571 ரன்களும் குவித்தன. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 175 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த நிலையில், ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. ஆட்டநாயகன் விருது கோலிக்கும், தொடர் நாயகன் விருது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனிடையே, … Read more
போருக்கு மத்தியில் புதினை சந்திக்க சீன அதிபர் ரகசிய திட்டம்…?
பீஜிங், சீனாவின் அதிபராக பதவி வகித்து வந்த ஜீ ஜின்பிங் போட்டியின்றி, மூன்றாவது முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சீனாவின் மத்திய ராணுவ ஆணைய தலைவராகவும் ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் பதவியில் 2 முறையே நீடிக்க முடியும் என்று இதுவரை இருந்து வந்த விதிமுறைகள் திருத்தப்பட்டன. இதனால், 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீப சீன வரலாற்றில் சக்தி … Read more