இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பரிந்துரைக்கு ஆதரவு| Support nomination of US Ambassador to India

வாஷிங்டன் : இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, எரிக் கார்செட்டியை நியமிக்க, 52, அமெரிக்க செனட் குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டியை, 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார். பல்வேறு காரணங்களால் இவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த சூழலில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரைக்கு, அரசு அதிகாரங்களில் வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் செனட் குழு ஒப்புதல் அவசியம் என்பதால், இதற்கான … Read more

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில், 6 ஹைப்பர்சோனிக் கின்சல் உள்பட 81 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்..!

ரஷ்யா நடத்திய தொடர் ஏவுகணை தாக்குதல்களால் மேற்கு உக்ரைனில் லிவிவ் பகுதியில் 5 பேரும், கெர்சோனில் 3 பேரும் உயிரிழந்தனர். தலைநகர் கீவ், ஒடேசா, கார்கிவ், கெர்சோன் உட்பட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் கட்டடங்கள், மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. 6 ஹைப்பர்சோனிக் கின்சல் ஏவுகணைகள் உள்பட 81 ஏவுகணைகள் மற்றும் 8 ட்ரோன்கள் மூலம் எரிசக்தி நிலையம் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 10 பிராந்தியங்களில் முக்கிய உள்கட்டமைப்புகள் … Read more

நேபாளம் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் தேர்வு| Nepal elects Ram Chandra Baud as its new president

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: நேபாளம் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேபாளம் அதிபராக இருந்த பித்யா தேவி பணடாரி பதவி காலம் மார்ச் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் நேபாளம் காங்கிரஸ், சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) உள்பட எட்டு கட்சிகள் ஆதரவுடன் ராம் சந்திரா பவுடால் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து சி.பி.எம். (யு.எம்.எல்.) … Read more

தன்னை கைது செய்ய வந்த போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர், சுட்டுக் கொல்லப்பட்டார்..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், தன்னை கைது செய்ய வந்த போலீசார் 3 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர், சுட்டுக் கொல்லப்பட்டார். பரோலில் வந்து தலைமறைவான நபரை போலீசார் தேடிச் சென்றபோது, அவர் கார் காரேஜுக்குள் (garrage) சென்று ஷட்டரை மூடிக்கொண்டார். காரேஜுக்குள் கண்ணீர் புகையை பாய்ச்சி அவரை வெளியேற்ற போலீசார் முயற்சித்தபோது, திடீரென வெளிப்பட்ட அந்த நபர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதில் போலீசார் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த போலீசார் ஒருவர் … Read more

6 மாதங்களுக்கு ஒரு முறை நாட்டை மாற்றும் தீவு! 364 ஆண்டு கால நடைமுறை!

ஒருபுறம் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் எல்லையில் போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்யா, உக்ரைன் அல்லது இந்தியா-சீனா என எல்லா இடங்களிலும் எல்லை தகராறு உச்சத்தில் உள்ளது. இப்போதும் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்சனைகள் காணப்படுகின்றன. இந்த சர்ச்சையின் காரணமாக பாகிஸ்தானுடன் இந்தியா சீனாவுடன் ஒருமுறை மற்றும் இரண்டு முறை போர் தொடுத்தது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் இன்னும் நடந்து வருகிறது. ஆனால் மறுபுறம், இந்த உலகில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு தீவு … Read more

இப்படி ஒரு திருடனா..? சிறைக்கு செல்வதற்காகவே வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர்..

அமெரிக்காவில், சிறைச்சாலையிலிருந்து விடுதலையான 65 வயது நபர், மீண்டும் சிறைக்கு செல்வதற்காக வங்கியில் வெறும் ஒரு டாலர் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சால்ட் லேக் சிட்டியிலுள்ள வெல்ஸ் ஃபார்கோ வங்கிக்கு வந்த டோனால்டு, வங்கியை கொள்ளையடிக்கப்போவதாக பேப்பரில் எழுதி அங்கிருந்த ஊழியர்களிடம் தந்துள்ளார். தனக்கு ஒரு டாலர் தருமாறு கேட்டு பெற்றுக்கொண்ட டோனால்டு, பின்னர் போலீசாரை வரவழைக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார். போலீசார் வர காலதாமதம் ஆனதால், வரவேற்பறையில் காத்திருந்த டோனால்டு, போலீசார் வந்ததும், தன்னிடமிருந்த ஒரு டாலரை … Read more

நாடாளுமன்றம் காதல் மன்றமானது: "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…? நாடாளுமன்றத்தில் காதலை கூறிய எம்.பி.,

சிட்னி, ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு குறித்த காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான நாடாளுமன்ற உறுப்பினர் நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? … Read more

இல்லத்தரசிக்கு இழப்பீடு… வீட்டு வேலை செய்ததற்கு ரூ. 1.75 கோடி – நீதிமன்றம் உத்தரவு!

ஸ்பெயினில் 20 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் அதாவது, திருமணமான காலத்தில் ஊதியமில்லாமல் வீட்டு வேலை செய்ததற்கு சுமார் ரூ. 1.75 கோடியை இழப்பீடாக முன்னாள் மனைவிக்கு கொடுக்குமாறு கணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     தம்பதியரின் திருமணத்தின் காலப்பகுதியில் வருடாந்திர குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் இந்த விவாகரத்து இழப்பீடு தொகை கணக்கிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நீதிபதி லாரா ரூயிஸ் அலமினோஸால் கணக்கிடப்பட்ட தீர்வு, திருமணத்தில் 25 வருட சேவைக்காக மனைவி இவானா மோரலுக்கு வழங்கப்பட்டது.  2020இல் … Read more

தலைநகரை மாற்றுவதில் இந்தோனேசியா தீவிரம் – காரணம் என்ன?

ஜகர்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த ஆண்டே ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து தலைநகரை மாற்றும் பணியில் இந்தோனேசிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்தரா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், தலைநகர் மாற்றப்படும் முடிவை சூழலியல் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தலைநகர் மாற்ற நடவடிக்கையால் போர்னியோ தீவில் காடழிப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் தேசிய திட்டமிடல் மற்றும் … Read more

இந்தியா – பாக்., எல்லையில் பதற்றம் அதிகரிக்கலாம்: அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை| Tension on India-Pak border may rise: US intelligence warns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியா- பாக்.., எல்லைகளில் வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க உளவுத்துறை கூறியிருப்பதாவது: இந்தியா- பாக்.., எல்லைகளில் வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கலாம். இந்திய எல்லை பிரச்னைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு உளவுத்துறை எங்களிடம் கூறியது. அணு ஆயுதம் ஏந்திய இரு நாடுகளுக்கு இடையே போர் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான … Read more