ரஷ்ய ராணுவ அதிகாரி மர்ம மரணம் | Russian military officer dies mysteriously

மாஸ்கோ, ரஷ்ய ராணுவ அமைச்சகத்தின் நிதித் துறையில், தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த மரினா யாங்கினா, 58, அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து விழுந்து, மர்மமான முறையில் பலியானார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த ஓராண்டாக போரிட்டு வருகிறது. இந்த போருக்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும் துறையில் தலைமை அதிகாரியாக மரினா யாங்கினா பணியாற்றி வந்தார். இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் … Read more

இலங்கையைப் போல் பாகிஸ்தான் பொருளாதாரம் சீர்குலையும் : இம்ரான் கான்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வாங்குவதும், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதும் பாகிஸ்தான் அரசின் நிதிச்சுமையை மேலும் அதிகரித்து, இலங்கையைப் போல் பொருளாதர சீர்குலைவை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு, சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனுதவி கோரியுள்ளது. இதனால், தற்காலிக நிவாரணமே கிடைக்கும் என்றும், பாகிஸ்தான் அரசு, தலைவலி மாத்திரையால் புற்று நோயை குணப்படுத்த முயல்வதாகவும் இம்ரான் கான் … Read more

பாகிஸ்தான் கராச்சி காவல்துறை தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல்!

பாகிஸ்தானின் பெஷாவரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, இப்போது கராச்சியில் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. 8 முதல் 10 பயங்கரவாதிகள் கராச்சியில் உள்ள போலீஸ் தலைமையகத்திற்குள் நுழைந்து ஆவேசமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் சேனல் வெளியிட்டுள்ள செய்தியில், கராச்சி காவல்துறை அலுவலகத்தின் அனைத்து விளக்குகளையும் அணைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. தலைமையகம் தவிர, பல மாடி கட்டிடத்திலும் சில பயங்கரவாதிகள் உள்ளனர். ஷஹ்ரா-இ-பைசல் பகுதியில் … Read more

துருக்கியில் மீட்புப்பணியின்போது மோப்ப நாய் உயிரிழப்பு.. நாயின் உடலுக்கு மெக்சிகோ ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை..!

துருக்கியில் மீட்புப்பணியின்போது உயிரிழந்த மோப்ப நாய்க்கு, மெக்சிகோ ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மீட்புப்பணிகளுக்கு உதவுவதற்காக, மெக்சிகோ ராணுவத்தினர் 16 நாய்களை அழைத்துச் சென்றனர். அதில் புரோடியா என்ற நாய், அதியமான் மாகாணத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த நிலையில், அதன் உடல் விமானம் மூலம் மெக்சிகோ ராணுவ விமான தளத்துக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நாய் 2 பேரை உயிருடன் மீட்க உதவியதாக மெக்சிகோ ராணுவம் தெரிவித்துள்ளது. … Read more

261 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்.. பெற்றோர் உயிருடன் உள்ளனரா என செல்போனில் பேசி மருத்துவ பணியாளரின் கையில் முத்தம்..!

துருக்கியில் நிலநடுக்கத்தால் சரிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 261 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட முஸ்தபா அவ்சி என்ற இளைஞர்,தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த நிலையிலும், தனது பெற்றோர் உயிருடன் இருக்கின்றார்களா என்று தெரிந்து கொள்ள, உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்ததும், தனக்கு பேசுவதற்கு செல்போன் கொடுத்து உதவிய மருத்துவ பணியாளரின் கையில் முத்தமிட்டு மகிழ்ந்தார். Source link

மூன்று வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் உக்ரைன் – ரஷ்யா போர்: ஒரு தெளிவுப் பார்வை

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தலைப்புச் செய்திகளில் இருந்து மறைந்திருக்கிறது. ஆனால், போரின் வீரியம் இன்னும் குறையவில்லை. உண்மையில், ஒரு வருடம் கழித்துப் பார்க்கும்போது, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மூன்று வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருப்பதை நாம் அறியலாம். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோன்பாஸ் பகுதியின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு ரஷ்யா கடந்த வாரத்தில்கூட கடும்போர் புரிந்ததாக அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய … Read more

அருணாச்சல் பிரதேசத்தை உரிமை கோரும் சீனா; செக் வைத்த அமெரிக்கா.!

இந்தியா மற்றும் சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. அதன் காரணமாக ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில், கடந்த 1962ம் ஆண்டு இந்திய-சீன போர் வெடித்தது. இதில் இந்தியா படுதோல்வி அடைந்து. இந்த தோல்வி குறித்த சிந்தனையிலேயே பிரதமர் நேரு உடல் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் … Read more

ஜிம்மில் பாலியல் தொந்தரவு அளித்தவனை அடித்து விரட்டிய இளம்பெண்.. ‘பெண்கள் மனம் தளராமல் போராட வேண்டும் என தெரிவிப்பு’..!

அமெரிக்காவில், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவனை, இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் ஒருவர் அடித்து விரட்டும் காணொலி, இணையத்தில் வைரலாகியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் ஜிம்-மில் தனியாக உடற்பயிற்சி செய்த நஷாலி அல்மாவை, அங்கு வந்த ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றான். தப்பியோடிய நஷாலியை, அவன் துரத்திச்சென்று, தரையில் தள்ளித்தாக்கினான். அவனது பிடிக்கு விட்டுக்கொடுக்காமல் நஷாலியும் பதிலுக்குத் தாக்கியதால், அவன் பின்வாங்கினான். போலீசார் அவனை பின்னர் கைது செய்தனர். இதுபோன்ற தருணங்களில், பெண்கள் மனம் தளராமல் போராட வேண்டும் … Read more

இந்திய பயணத்தை ரத்து செய்த ஈரான் அமைச்சர்; சர்வதேச அரசியலில் பரபரப்பு.!

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் கொதிநிலையை எட்டியுள்ளது. ஹிஜாப் அணியாமல் சென்ற மாஷா அமினி என்ற இளம்பெண்ணை கலாச்சார காவல்ப்பிரிவு தாக்கியதில் மரணமடைந்தார். ஆனால் அமினி காவலில் தாக்கப்பட்ட பின்னர் இறந்தார் என்ற குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது, மேலும் அவரது மரணம் நோயால் ஏற்பட்டதாகக் கூறியது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் 500க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15 ஆயிரத்திற்கு அதிகமானோர் … Read more