சீன தயாரிப்பு மொபைல் போன்களை இந்திய வீரர்கள் பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் எச்சரித்த உளவுத்துறை..!

சீன எல்லைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்திய வீரர்கள் சீன தயாரிப்பு மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம் என உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. சீன மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அத்தகைய போன்களில் ஸ்பைவேர் மற்றும் மால்வேர் இருப்பதாகவும் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. ஏற்கனவே ராணுவ அதிகாரிகள் சீன தயாரிப்பு போன்களை பயன்படுத்த தடை உள்ள நிலையில் தற்போது ராணுவ வீரர்களும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது … Read more

பாக்.,-ஐ சேர்ந்த துணைவேந்தருடன் ஒரே மேடையில் ராகுல்: வைரலாகும் புகைப்படம்| BJP Raps Rahul Gandhi For Sharing Stage With Pakistani During Anti-India Rant At Cambridge

லண்டன்: லண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சிகளில், அங்கு சார்பு துணைவேந்தராக இருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த கமால் முனீருடன் காங்கிரஸ் எம்.பி., ராகுல் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. உரை காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின்(ஜேபிஎஸ்) கவுரவ விரிவுரையாளராக இருக்கும் ராகுல் ’21ம் நூற்றாண்டின் கேட்டலுக்கான கற்றல்’ என்ற மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். கருத்தரங்கிலும் பேசினார். பாக்., அரசில் பணி இந்த … Read more

மேற்கு ஆப்பிரிக்காவில் கிராமத்தில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு, 12 பேர் உயிரிழப்பு..!

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாஸோவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் உவாகிகவ்யாவிற்கு வடக்குப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், சிறுவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 7 சிறுவர்கள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். Source link

ஆப்கனில் பெண்களுக்கு தலிபான்களால் கொடுமை | In Afghanistan, women are brutalized by the Taliban

காபூல் : ஆப்கனில், விவகாரத்துக்கு உள்ளான பெண்களை, மீண்டும் தங்கள் கணவர்களுடன் சேர்ந்து வாழும்படி தலிபான் அமைப்பினர் கட்டாயப்படுத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தானை, 2021ல் தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு திருமணமாகி விவகாரத்துக்குள்ளான பெண்கள் பலர், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. பயங்கரவாதிகளிடமிருந்து அமெரிக்கப் படையினர் ஆப்கனை மீட்டபோது, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். எனினும் தலிபான் ஆட்சிக்கு வந்தபின், பெண்கள் கடும் துயரங்களுக்கு உள்ளாகினர். குறிப்பாக, விவகாரத்துக்கு உள்ளான பெண்களை, … Read more

அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசிடம் நிதியில்லை – மம்தா பானர்ஜி

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக அகவிலைப்படி அளிக்கக்கோரி மேற்குவங்க அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அண்மையில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியில் மகிழ்ச்சி இல்லையெனில் தனது தலையை வெட்டி எடுத்து கொள்ளும்படி அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மார்ச் மாதம் முதல் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்காமல் மேற்குவங்க மாநில அரசு ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய மம்தா … Read more

அண்டார்க்டிகாவில் பனி மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாகத் தகவல் – விஞ்ஞானிகள்

அண்டார்க்டிகாவில் கடந்த 6 ஆண்டுகளில் 3வது முறையாக கடல் பனி மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் கடல் மட்டம் கடுமையான வீழ்ச்சியைக் கண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல் பனி மிகவும் பிரதிபலிப்பதாலும், வெப்பத்தின் தாக்கம் அங்கு குறைவாக இருப்பதாலும் பனிக்கட்டிகள் உருகுவது கடினம் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள் ஆனால் பனியின் அடியில் ஓடும் நீர் அதனை உருகச் செய்யும் என்று கூறியுள்ளனர். அண்டார்டிகா … Read more

என்னை கொல்ல மீண்டும் முயற்சி நடக்கிறது: பாக்., தலைமை நீதிபதிக்கு இம்ரான் கடிதம்| There is another attempt to kill me, Imrans letter to the Chief Justice of Pakistan

இஸ்லாமாபாத் : ‘என் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, நான் படுகொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’ என, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் வாயிலாக வேண்டுகள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்த போது, பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் அவருக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அளித்தனர்.அந்த பரிசுப் பொருட்களை … Read more

டிரக் மீது தற்கொலை படை தீவிரவாதி பைக் மோதல் – பாக்.கில் 9 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

கச்சி: பாகிஸ்தானில் போலீஸார் சென்ற டிரக் மீது இருசக்கர வாகனத்தை மோதி தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 9 அதிகாரிகள் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவில் இருந்து தென்கிழக்குப் பகுதியில் 120 கி.மீ. தொலைவில் உள்ளது கச்சி மாவட்டம். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரமான தாதர் பகுதியில் நேற்று போலீஸ் அதிகாரிகள்டிரக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டிரக்கின் பின்னால் இருசக்கர வாகனத்தை மோதி தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் … Read more