கிரீஸில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து.. பலி எண்ணிக்கை 38ஆக உயர்வு!
கிரீஸில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பலியானோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. 350 பயணிகளுடன் ஏதென்சில் இருந்து தெசலோனிகிக்கு சென்ற ரயில், லாரிசா எனும் பகுதியில் சரக்கு ரயிலுடன் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தடம்புரண்டன. அதில் 2 பெட்டிகள் முழுவதும் உருக்குலைந்தன. இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்த நிலையில், 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானோரில் பலர், மாணவர்கள் ஆவர். … Read more