இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்.. காசாவில் இரண்டே நாட்களில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

டெய்ர் அல்-பலா (காசா பகுதி), இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.இந்த போாில் பாலஸ்தீனத்தை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வரும் போரில், காசாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மதியம் 12.17 மணிக்கு ஏற்ப்ட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. காஷ்மீர், டெல்லி … Read more

மோடியுடன் பேசியது பெருமை அளிக்கிறது: விரைவில் இந்தியாவுக்கு வருகிறேன்: எலான் மஸ்க்

வாஷிங்டன், உலகின் பெரும் கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் வலைத்தளம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் நல்ல செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, எலான் மஸ்கை சந்தித்து பேசினார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று எலான் மஸ்குடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் பிரதமர் … Read more

வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கடத்தி, படுகொலை

டாக்கா, வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து வடமேற்கே 330 கிலோ மீட்டர் தொலைவில் தினாஜ்பூர் மாவட்டத்தில் பாசுதேப்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பாபேஷ் சந்திரா ராய் (வயது 58). இந்து மதத்தின் பிரபல தலைவராக அறியப்பட்ட இவர், மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி ராயின் மனைவி சாந்தனா செய்தியாளர்களிடம் கூறும்போது, அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அவர் வீட்டில் இருக்கிறாரா? என உறுதி செய்து கொள்வதற்காக இந்த அழைப்பு வந்தது என … Read more

கனடாவில் துப்பாக்கி சூடு: இந்திய மாணவி பலி

ஒட்டாவா, கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணம் ஹமில்டன் நகரில் உள்ள மொஹ்வாக் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த ஹர்சிம்ரத் ராதாவா (வயது 21) என்ற மாணவி கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், ஹர்சிம்ரத் நேற்று இரவு 7.30 மணியளவில் சவுத் பெண்ட் சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர் அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சுக்கு காத்திருந்த இந்திய மாணவி … Read more

‘இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்’ – எலான் மஸ்க் தகவல் 

வாஷிங்டன்: “பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமைக்குரியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்.” என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரதமர் மோடியுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடிய நிலையில் எலான் மஸ்க் தனது இந்திய வருகை குறித்து தெரிவித்துள்ளார். தன்னுடன் பேசியது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவினை இணைத்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “பிரதமர் மோடியுடன் பேசியது மிகவும் பெருமைக்குரியது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவுக்கு … Read more

ஏப்.30-க்குள் 80,000 ஆப்கானியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாத ஆப்கானியர்கள் அல்லது ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்துள்ளவர்கள் மார்ச் 31-ம் தேதிக்கு பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாடு எச்சரித்திருந்தது. தவறினால் சம்மந்தப்பட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தது. பின்பு இந்தக் காலக்கெடு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தலால் சவுதரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏப்ரல் 30 என்பது … Read more

விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்கர் சுட்டுக் கொலை

சான் பெட்ரோ: கரீபியன் நாடான பெலீசுவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் (49) சுட்டுக் கொல்லப்பட்டார். கரீபியன் கடல் பகுதியில் பெலீசு நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் கோரசோல் நகரில் இருந்து சான் பெட்ரோ நகருக்கு சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 14 பேர் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் … Read more

விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ல் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா: சர்வதேச விமான நிலைய கவுன்சில் தகவல்

புதுடெல்லி: விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் என்று சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ஏசிஐ) தெரிவித்துள்ளது. உலகின் வேகமான சிவில் விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் விமானப் பயணிகள் போக்குவரத்தின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 10.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது சீனாவுக்கான மதிப்பீடான 12 சதவீதத்தை விட குறைவாகும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவுக்கு மிகப் பெரிய விமானச் சந்தை உள்ளது. இந்நிலையில் … Read more

பாகிஸ்தானில் கேஎஃப்சி கடைகள் மீதான தாக்குதலும், 178 பேர் கைதும் – பின்னணி என்ன?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்கவைச் சேர்ந்த சங்கிலித் தொடர் துரித உணவு கடைகளான கேஎஃப்சி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்தனர். அமெரிக்க எதிர்ப்புணர்வு மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேஎஃப்சி கடைகள் மீது கும்பல் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சமீப வாரங்களாக ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். பாகிஸ்தானின் தெற்குப் … Read more