துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்வு| Turkey, Syria earthquake death toll rises to 25 thousand

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில், இந்திய மீட்புக்குழுவினர் நிவாரண உதவி..!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிலநடுக்கத்தால் துருக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா சார்பில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதுடன், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி இந்தியா சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மீட்புக்குழுவினர் வழங்கினர். Source link

டில்லி -ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சாலை நாளை திறக்கிறார் மோடி| Now, Delhi To Jaipur In Only 3.5 Hours, Courtesy This Key Expressway

புதுடில்லி: டில்லி – ஜெயப்பூர் எக்ஸ்பிரஸ் சாலையை நாளை பிரதமர் மோடி வாகன போக்குவரத்திற்கு திறந்து வைக்கிறார். மும்பை- வதேதரா -டில்லி எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் ரூ. 12,150 கோடி செலவில் துவங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. 12 நகரங்களையும் இணைக்கும் இந்த சாலை மொத்த 1,386 கி.மீ. தூரம் உள்ளது. இதில் டில்லி- ஜெய்ப்பூர் இடையேயான 180 கி.மீ. தொலைவில் உள்ள சாலையை 3.5 மணி நேரத்தில் கடக்கலாம். இச்சாலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். … Read more

துருக்கி பூகம்பம் | பிறந்து 10 நாள் ஆன குழந்தை 90 மணி நேரத்துக்குப் பின் தாயுடன் மீட்பு!

டமஸ்கஸ்: துருக்கியில் பிறந்து 10 நாட்களான குழந்தை 90 மணி நேரங்களுக்குப் பிறகு பூகம்ப இடிபாடுகளிலிருந்து தாயுடன் மீட்கப்பட்டது. கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கியில் ஹடாய் நகரமும் ஒன்று. இங்கு 5 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஹடாய் நகரில் பிறந்த 10 நாட்களான குழந்தை ஒன்று, அதன் தாயுடன் 90 மணி நேரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாகிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தை காயங்களுடன் … Read more

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க பாகிஸ்தான் முடிவு..!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க உள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் அறிவித்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ள பாகிஸ்தானிடம் தற்போது 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே அந்நிய செலவானி உள்ளதாகவும், இத்தொகை அவர்களின் 16 நாள் இறக்குமதிக்கே செலவாகி விடும் என்றும் கூறப்படுகிறது. கடனுக்கான நிபந்தனையை ஏற்றதால், பாகிஸ்தானுக்கு முதற்கட்டமாக சுமார் 120 கோடி அமெரிக்க … Read more

சிரியாவில் பூகம்பத்தால் வீடிழந்த 50 லட்சம் மக்கள் பரிதவிப்பு

டமஸ்கஸ்: பூகம்பத்தினால் சிரியாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டரில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 24,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதில், போரினால் பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வந்திருந்த சிரிய மக்கள் பலரும் மீண்டும் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். இதுகுறித்து … Read more

இந்தியா நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்தலாமா.? – அமெரிக்கா பதில்.!

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் நேட்டோவில் இணைய உக்ரைன் சம்மதம் தெரிவித்ததால், அதை எதிர்த்து ரஷ்யா போரை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறது. … Read more

‘பல உயிர்களைக் காப்பாற்றிய ஜூலி’ – துருக்கி மீட்புப் பணியில் இந்திய மோப்ப நாய்கள் தீவிரம் 

அங்காரா: துருக்கி – சிரியா பூகம்பத்தில் மீட்புப் பணிகளில் உதவிட இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மீட்புக் குழு சிறப்பாக செயல்பட்டு வரும் அதேவேளையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறிய மோப்ப நாய்கள் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றன. பூகம்பத்தால் பாதித்த துருக்கியில் இந்திய மீட்புக் குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக இந்தப் பணி தொடர்கிறது. இந்திய மீட்புக் குழுவுடன் ஜூலி, ரோமியோ, ஹனி, ராப்போ என்ற நான்கு மோப்ப … Read more

“டிக்‌ஷனரியில் கிட்டாத அர்த்தம் மிக்க சொற்கள்…” – இந்தியர்களின் உதவியால் துருக்கி தூதர் நெகிழ்ச்சி

அங்காரா: துருக்கியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருளாக 100 போர்வைகளை அனுப்பிவைத்த இந்தியர்கள் சிலருக்கு இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராத் சுனெல் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார். துருக்கியின் காஜியன்டப் நகரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு இதுவரை துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி துருக்கியை அடுத்தடுத்து மூன்று பூகம்பங்கள் உலுக்கின. அதிகாலை 4.30 மணியளவில் 7.8 ரிக்டர் அளவிலும் மாலையில் 7.6 … Read more

மோடி நினைத்தால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும்: அமெரிக்கா நம்பிக்கை| Modi can stop war on Ukraine if he wants: US desire

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இது ஓராண்டை கடந்துள்ள நிலையில், தற்போது இரு தரப்பும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி … Read more