உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.26 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 98 லட்சத்து 1 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 45 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

2022ம் ஆண்டு சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி..!

2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது, அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2023ம் ஆண்டுக்கான பிபா விருதுகள் வழங்கப்பட்டன. இதில்  சிறந்த வீரராக லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.  சிறந்த மகளிர் வீராங்கனை விருது 2வது ஆண்டாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாசுக்கு அளிக்கப்பட்டது.    Source link

'டிக்டாக் லைவ்'வில் மனைவி கன்னத்தில் அறைந்த கணவர் – புகார் கொடுக்காதபோதும் ஓராண்டு சிறை, மனைவியுடன் பேச 3 ஆண்டு தடை…!

மெட்ரிட், ஸ்பெயின் சொரியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் சமூகவலைதளமான டிக்டாக்கில் தனது 4 நண்பர்களுடன் லைவ் ஸ்டிரீமீங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில், அதிக பார்வையாளர்களை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கடந்த மாதம் 28-ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது. டிக்டாக் லைவ்வில் பேசிக்கொண்டிருந்தபோது அப்பெண்ணை திடீரென அவரது கணவர் கன்னத்தல் ‘பளார்’ என அறைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிகழ்வு அனைத்தும் டிக்டாக் லைவ்-வில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. இந்த நிகழ்வு ஸ்பெயின் … Read more

அதிகாரப்பூர்வ சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கம் – கனடா அரசு அதிரடி

ஓட்டாவா, இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள சி.என்.என். அறிக்கையின்படி, “டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும், டிக்டாக் செயலிக்கான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளது. கனடா அரசு செயலகத்தின் கருவூல வாரியத்தின் அறிக்கையின்படி, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்கள் டிக்டாக் செயலியை பதிவிறக்குவதில் இருந்து தடுக்கப்படும். … Read more

நியூ கினியா நாட்டில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேராசிரியர் உள்பட 3 பேர் விடுவிப்பு

பப்புவா நியூ கினியா நாட்டில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேராசிரியர் உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர். தெற்கு குயின்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Bryce Barker  மற்றும் Teppsy Beni என்ற மாணவி மற்றும் பப்புவா நியூ கினியா தேசிய அருங்காட்சியக ஆராய்ச்சியாளர் Jemina Haro  ஆகியோர் ஒரு வாரத்திற்கு முன்பு 20 பேர் கொண்ட தீவிரவாத குழுக்களால் சிறைபிடிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாத கும்பல் கேட்ட பிணையத் தொகை வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் 3 பேரும் … Read more

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் – நிக்கி ஹாலே

வாஷிங்டன், சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என்று முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம். அமெரிக்கா சீனாவுக்கான உதவியை நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “எந்த ஒரு வலுவான அமெரிக்கரும், தன் பணம் மோசமான நபர்களுக்கு சென்றடைவதை விரும்ப மாட்டார்கள். இந்த வகையில், நான் அதிபராக … Read more

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அம்புலுவாவ கோபுரம்.. வெளிநாட்டு சுற்றுலா பயணி எடுத்த செல்பி வீடியோ வைரல்!

இலங்கையின் அம்புலுவாவ பகுதியில் உள்ள 48 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த செல்பி வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. செங்குத்தாகவும், குறுகிய இடைவெளி கொண்டதாகவும் இருக்கும் அந்த கோபுரத்தில் உயிரை பணயம் வைத்து அவர் ஏறியுள்ளார். இக்காட்சியை செல்பி வீடியோ மூலம் அவர் பதிவிட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ரி டுவிட் செய்துள்ளார்.

வளர்கிறது இந்தியா அமெரிக்கா பெருமிதம்| India is growing and America is proud

வாஷிங்டன் : ‘உலக அரங்கில், இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது’ என, அமெரிக்க மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை உதவி செயலாளர் நான்சி இஸோ ஜாக்ஸன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஜி – 20’ அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது நாட்டின் வளர்ச்சியை ஒவ்வொரு துறையிலும் வலுப்படுத்தும். இதன் வாயிலாக உலக அரங்கில் இந்தியாவின் பங்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதேபோலவே அமெரிக்கா – இந்தியா … Read more

காய்கறிகள் கிடைக்காமல் தவிக்கும் பிரிட்டன் மக்கள்! கடும் தட்டுப்பாடு நீடிக்கும் நிலை!

பிரிட்டன் மக்கள் தற்போது தக்காளி, வெள்ளரி மற்றும் மிளகாய் போன்ற காய்கறிகளுக்கு கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு, கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் பல நாட்களாக காய்கறி கடைகளுக்கு தக்காளி வரவில்லை. எங்கு சென்றாலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் ஆன்லைன் காய்கறி ஆர்டர்களை டெலிவரி செய்யும் பல இணையதளங்களில் தக்காளி விலை, இந்திய ரூபாயில்  கிலோ ரூ.400  என்ற அளவில் உள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை, அனைத்து முக்கிய UK பல்பொருள் அங்காடி குழுக்களும் வாடிக்கையாளர்கள் … Read more

பள்ளி செல்வதை தடுக்க சிறுமிகளுக்கு விஷம்  – ஈரானில் நடக்கும் கொடுமை

டெஹ்ரான்: ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மதஅடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளன. ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினிஎன்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணிய வில்லை எனக் கூறி அவரை கைதுசெய்த போலீஸார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இதனால், ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அங்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 3 … Read more