இத்தாலி படகு விபத்து: 43 பேர் பரிதாப பலி| Italy boat accident: 43 dead

ரோம் : இத்தாலி கடல் பகுதியில், நேற்று நடந்த படகு விபத்தில் சிக்கி, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஐரோப்பிய நாடான இத்தாலியின் தெற்கு கடல் பகுதி கேலப்ரியாவில், குட்ரோ என்ற நகர் அருகே, 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றபடகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. நேற்று அதிகாலை நடந்த இந்த விபத்தை அடுத்து, இதுவரை 43 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் இத்தாலி கடற்படை, எல்லை பாதுகாப்பு போலீசார் … Read more

வளரும் நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு சீனா பயிற்சி; ஐரோப்பிய நாடுகள் கதறல்.!

அடுத்த ஐந்தாண்டுகளில் வளரும் நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை சீனா வெளிப்படுத்தியுள்ளது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சீனாவின் குளோபல் செக்யூரிட்டி முன்முயற்சி குறித்த செய்திதாளில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான சர்வதேச தளங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு, உயிர் … Read more

அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு; மோசமாகும் பாகிஸ்தானின் நிலை.!

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்காக நோயாளிகள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யவோ அல்லது உள்நாட்டு உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவோ இயலாத நிலை உள்ளது. இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதிப்படுவதால், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாகிஸ்தான் ஊடக … Read more

இந்திய உறவு: அமெரிக்கா பெருமிதம்| Indian Relations: Americas Pride

வாஷிங்டன் : ‘இந்திய ராணுவத்துடனான உறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது’ என, அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா ராணுவத்தின் தலைமையகமான ‘பென்டகனின்’ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட்ரிக் ரைடர் கூறியதாவது: இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ராணுவ ரீதியிலான சிறந்த நட்பு உள்ளது; இதை மேலும் பலப்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. 1997ல் இந்தியா – அமெரிக்க ராணுவம் இடையே பாதுகாப்பு தொடர்பான வர்த்தகம் மிக குறைவாகவே இருந்தது. தற்போது … Read more

பாகிஸ்தான், இலங்கைக்கு கடன் தந்து கவிழ்க்கும் சீனா: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை| China overturns loans to Pakistan, Sri Lanka: US warns India

வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதற்காகவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், இலங்கைக்கு சீனா கடனுதவி அளிக்க முன்வந்திருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. தேவையான உதவி இந்நிலையில் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஜி – ௨௦ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மார்ச் ௧ – ௩ வரை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கென் இந்தியாவுக்கு … Read more

பரபரப்பான சந்தைப் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் மக்கள் அதிகம் கூடியிருந்த சந்தைப் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் படுகாயமடைந்தனர். பலுச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள அந்த சந்தையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து குண்டு வெடித்துள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டு குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான கடைகளும் சேதமடைந்துள்ளன. கடந்த மாத இறுதியில் பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 32 … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.23 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 95 லட்சத்து 68 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 5 ஆயிரத்து 903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

பைசாபாத், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 02.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் பைசாபாத்