துருக்கி, சிரியா நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 11,236 ஆக உயர்வு..!

துருக்கி, சிரியாவை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 200-ஐ கடந்துள்ளது. இதில், துருக்கியில் 8 ஆயிரத்து 574 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 2 ஆயிரத்து 662 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய சடலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Source link

துருக்கி, சிரியாவை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கம்.. 9,500-ஐ தாண்டிய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!

துருக்கி, சிரியாவை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. இதில், துருக்கியில் 6 ஆயிரத்து 957 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 2 ஆயிரத்து 547 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் 3 மாதம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடும் குளிர் வாட்டிவதைப்பதால், உணவு, போர்வை போன்ற நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்குமாறு மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய சடலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து … Read more

சுடப்பட்ட பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க முடியாது – அமெரிக்கா

சுடப்பட்ட பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க முடியாது என்று அமெரிக்கா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி, கடல் மேற்பரப்பில் விழுந்த ராட்சத பலூனின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடலுக்கு அடியில் சென்ற பலூன் சிதைவுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது என்றும் கூறினார்.  தங்களுக்கு கிடைத்த தகவலை பகுப்பாய்வு செய்து வருவதாக அவர் மேலும் கூறினார். Source link

சட்டத்தின் ஆட்சி இருப்பதே இந்தியா முன்னேற காரணம்: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

லாகூர்: இந்தியா முன்னேறுவதற்குக் காரணம், அங்கு சட்டத்தின் ஆட்சி இருப்பதுதான் என்றும், பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போகுமானால் அதற்கு எதிர்காலம் இருக்காது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், லாகூரில் உள்ள தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பஞ்சாப் மற்றும் கைபன் பக்துன்வா மாகாணங்கள் போன மாதமே கலைக்கப்பட்டுவிட்டன. … Read more

பெருவில் அசுர வேகத்தில் பறவை காய்ச்சல் – 600 கடற்சிங்கங்கள் பலி!

பெரு நாட்டில் பரவிய பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் 600 கடற்சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன. பெரு நாட்டில் சமீப வாரங்களாக எச் 5 என் 1 வகை பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பாதுகாக்கப்பட்ட 8 கடலோர பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இது தவிர, பாதுகாக்கப்பட்ட 7 கடல்வாழ் பகுதிகளில் இருந்து 585 கடற்சிங்கங்கள் உயிரிழந்து உள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனை செர்னான்ப் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் … Read more

கிரீஸ் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!

கிரீஸ் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்தனர். உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சமடைய ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், லெஸ்போஸ் தீவுக்கு அருகே உள்ள கடற்பாறையில் அகதிகள் படகு மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்று நீரில் தத்தளித்த 16 பேரை உயிருடன் மீட்டனர்.  Source link

பூகம்பம் | துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு 8,300 ஆக அதிகரிப்பு

அங்காரா – டமஸ்கஸ் : சிரியா – துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,364 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்க பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, ”இது காலத்திற்கு எதிரான ஓட்டம். நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு எங்களது மருத்துவக் குழுவை நாங்கள் அனுப்பி இருக்கிறோம். நிலநடுக்கத்திற்கு இதுவரை சிரியா – துருக்கியில் 8,364 பேர் பலியாகி உள்ளனர். இதில் துருக்கியில் 5,894 பேரும், சிரியாவில் 2,470 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்திற்கு … Read more

பாகிஸ்தானில் சாலை விபத்தில் 30 பேர் பலி; 15 பேர் காயம்| 30 killed in road accident in Pakistan; 15 people were injured

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கோஹிஸ்தான் மாவட்டத்தில் காரகோரம் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது, பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பஸ் மற்றும் கார் அருகேயிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில், 30 பேர் உயிரிழந்து உள்ளனர். 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா … Read more

கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை! துருக்கி & சிரியாவில் மக்களின் நிலை திண்டாட்டம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8500 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் தற்போதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், துருக்கியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மீட்புப்பணிகளுக்குத் தடையாக உள்ளது. இதனால், உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. சிரியாவில் ஏற்கனவே நிலைமை மோசமாக இருந்தது. உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு … Read more

துருக்கி, சிரியாவில் 8,000-ஐ தாண்டிய பலி: கடும் குளிருக்கு மத்தியில் மீட்பு படை போராட்டம்| Turkey-Syria Earthquake Deaths Top 8,300

அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கு, கடும் பனிக்கு மத்தியில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்திய சார்பில் மீட்பு படையினர் நிவாரண பொருட்களுடன் விரைந்துள்ளனர். துருக்கியின் தென்மேற்கே உள்ள காசியன்டெப்பை மையமாக வைத்து கடந்த திங்கட்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து 7.5, 6.6 ரிக்டர் அளவுகள் என … Read more