எரிவாயு கசிவால், அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து.. 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு..!

ரஷ்யாவின் நொவசிபிர்ஸ்க் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவால் நேர்ந்த பயங்கர வெடி விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் 2 வாயில்கள் இடிந்து தரைமட்டமானதுடன், 30 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. எரிவாயு கசிவு தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. Source link

சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு..!

சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான். ஜேன்ட்ரிஸ் நகரில், தரைமட்டமான 5 மாடி கட்டிடத்தின் இடிபாடு குவியல்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மோஸ் என்ற அந்த சிறுவனின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்த நிலையில், தாய், தந்தையரைத் தேடி அவன் கதறியழுத காட்சிகள் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. Source link

பாகிஸ்தானில், அடுத்த வாரம் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என தகவல்.. விற்பனையை குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்!

பாகிஸ்தானில், அடுத்த வாரம் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானதால், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், லாபமீட்டும் நோக்கில் வாடிக்கையாளர்களுக்கு குறைவான அளவில் பெட்ரோல் விற்பனை செய்துவருகின்றனர். பல பெட்ரோல் நிலையங்களில், இருசக்கர வாகனங்களில் 2 லிட்டர் பெட்ரோல் மட்டுமே நிரப்பபடுகின்றன. பெட்ரோல் விலையை உயர்த்தப்போவதில்லை என்றும், அடுத்த 20 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் இருப்பு உள்ளதாக தெரிவித்த பாகிஸ்தான் அரசு, செயற்கை தட்டுப்பாடை ஏற்படுத்தும் எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

இந்தியா மீது தடையா: அழுத்தமாக மறுக்கிறது அமெரிக்கா | “Comfortable” With India Approach On Russian Oil, No Sanctions: US

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கவில்லை என அமெரிக்க துணை அமைச்சர் கரேன் டான்பிரெட் கூறியுள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா மீது அமெரிக்கா பல வித பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்நாட்டிடம் இருந்து சலுகை விலையில், கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பா மற்றும் யூரேஷியாவிற்கான … Read more

7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம்..!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வால்ட் டிஸ்னியில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவை மிச்சப்படுத்த 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும், இது உலகளவில் வால்ட் டிஸ்னியில் உள்ள மொத்த ஊழியர்களில் 3.6 சதவீதம் … Read more

பூகம்பம்: பலி 16 ஆயிரத்தை தாண்டியது: தம்பியை பாதுகாத்த பாசக்கார சிறுமி| “Brave Girl”: WHO Chief On Viral Video Of Syrian Girl Shielding Brother

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டமாஸ்கஸ்: சிரியாவில், பூகம்ப இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட சிறுமி, 17 மணி நேரம் தனது தம்பியை பாதுகாத்து வைத்திருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த உலக சுகாதார அமைப்பு தலைவர் உள்ளிட்டோர் அந்த சிறுமியை பாராட்டி வருகின்றனர். 16 ஆயிரம் பேர் பலி துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது. வீடுகளை … Read more

கனடாவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்து விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

கனடாவின் மாண்ட்ரீல் அருகேயுள்ள லாவல் நகரில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பெற்றொர் தங்களது குழந்தைகளை பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்ற நேரத்தில், அரசு பேருந்து ஒன்று பராமரிப்பு மையத்தினுள் புகுந்து விபத்துக்குள்ளானது. கவனக்குறைவுடன் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ … Read more

Turkey Earthquake: அதிகரிக்கும் துருக்கி நிலநடுக்க சேதாரங்கள்! இதுவரை 15,383 பேர் பலி

Turkey-Syria Earthquake: துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000ஐத் தாண்டியது; குளிர் காலநிலை மீட்புப் பணிகளைத் தடுக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 15,383 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கண்டறிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 15,383 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD தெரிவித்துள்ளது. சிரியாவில்உறைய வைக்கும் குளிர், காலரா … Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

இஸ்தான்புல், துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12 ஆயிரத்து 391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2 ஆயிரத்து 992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. … Read more

தம்பிக்கு கவசமான தமக்கை: சிரிய சிறுமிக்கு உலக சுகாதார நிறுவனத் தலைவர் பாராட்டு

டமஸ்கஸ்: கட்டிட இடிபாடுகளில் 17 மணி நேரம் சிக்கியிருந்தும் தன் தம்பிக்கு பாதுகாப்பாக துணிச்சலுடன் இருந்த சிறுமியை உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் வெகுவாகப் பாராட்டியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்ப பாதிப்பால் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இந்நிலையில் சிரியாவில் மீட்புப் பணிகளின் போது இடிபாடுகளுக்கு இடையே இருந்து ஒரு சிறுமியும் அவரது சகோதரரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலான நிலையில் அதனைப் பகிர்ந்த உலக … Read more